Monday, March 10, 2025
HomeLocal News"மண்டைமேல் இருந்த கொண்டையை மறந்ததால்" மாட்டிக்கொண்ட சந்தக நபர்!

“மண்டைமேல் இருந்த கொண்டையை மறந்ததால்” மாட்டிக்கொண்ட சந்தக நபர்!

suspect arrested over phone call 6151

கணேமுல்ல சஞ்சீவ கொலையில் கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி, மஹரகம, தம்பஹேன வீதியில் வசிக்கும் 27 வயதுடைய சமிந்து தில்ஷான் பியுமங்க கந்தனாராச்சி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் வைத்திருந்த சட்டத்தரணி அடையாள அட்டை இலக்கம் கொலை செய்யப்பட்ட சஞ்சீவவின் கைதி இலக்கம் என்றும், QR இலக்கம் கொவிட் காலத்தில் பயன் படுத்தியது என்றும் கண்டறியப்பட்டது.

பலவித ஒத்திகைகளோடும் சினிமா பாணியில் திட்டம் போட்டவர்கள் மண்டைமேல் இருந்த கொண்டையை மறந்ததே அவர்களை சிக்கவைத்துள்ளது.

சம்பவம் நடந்த இடத்தில் துப்பாக்கி தாரியும் உதவியாக இருந்த பெண்ணும் தொலைபேசி அழைப்பில் நேரலையில் இருந்தபடியே வேலைகளைச் செய்துள்ளனர். அதேவேளை வௌிநாட்டில் உள்ள பாதாள கும்பலைச் சேர்ந்த ஒருவரும் இந்ந நேரலை தொலைபேசி அழைப்பில் இருந்துள்ளார்.

கனேமுல்ல சஞ்சீவவின் கொலையாளிக்கு பல பெயர்கள்!

மீனகாய ரயிலுடன் மோதி யானைக் கூட்டம் பலி – போக்குவரத்து பாதிப்பு!

கனேமுல்ல சஞ்சீவ கொலை : பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்!

சம்பவம் நடந்து முடிந்த பிறகு நீதிமன்ற வளாகத்தில் இருந்து இயங்கிய சில தொலைபேசி டவர்களை கண்காணித்த பொலிஸ், தொடர்ந்தும் நேரலையாக இயங்கிய தொலைபேசி இலக்கங்களின் தொடர்புகளை ட்ரக் செய்த போதே சந்தேகநபர் போகும் வளி தெரியவந்துள்ளது.

புதிய சிம்களைப் பயன்னடுத்தி நான்கு முறை ஒத்திகை பார்த்து சம்பவத்தை அரங்கேற்றினாலும் தொலைபேசி அழைப்பை அன்றய தினம் பேணியதால் சிக்கி இருக்கிறார் துப்பாக்கிதாரி.

அதுமட்டுமல்ல போலி சட்டதரணியாக வந்த பெண்மணி நீர்கொழும்பில் போதைவஸ்துக்கு அடிமையாகியவர் என்றும், விற்ப்பவர் என்றும் கண்டறியப்பட்டதுடன், துப்பாக்கிதாரியுடன் நீண்டகாலமாக நட்புக்கும் அப்பாற்பட்ட தொடர்பில் இருந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

சம்பவம் நடந்து சிறிது நேரத்தில் இப்பெண்மணி நீர்கொழும்பு பொலிஸ்நிலயத்தில் உள்ள அதிகாரி ஒருவருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி இருக்கின்றார்.

இப் பெண்மணிக்கு நீர்கொழும்பு நீதிமன்றில் ஒரு வழக்கு இருப்பதால் அதற்க்கு இனி ஆஜராக முடியாது காரணம் தான் துபாய் செல்ல இருப்பதாக தெரிவிப்பதற்காகவே பொலிஸ் உத்தியோகத்தருக்கு அழைப்பை ஏற்படுத்தியதாக தெரிய வந்தாலும், இவ்விருவருக்குமான தொடர்பு தொழில் சார்ந்ததா இல்லை அதற்கும் அப்பாற் பட்டதா என்று தெரிந்துகொள்ள அவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இன்னும் சம்மந்தப்பட்ட பெண்மணி கைதுசெய்யப்படவில்லை என்பது குறிப்படத்தக்கது.

suspect arrested over phone call 6151

இதையும் படியுங்கள்

மருமகன் பொல்லால் தாக்கியதில் மாமனார் உயிரிழப்பு!

கனேமுல்ல சஞ்சீவ கொலை – துப்பாக்கிதாரியின் படம் வௌியானது!

கடவுச்சீட்டுகளை ஒப்படைக்குமாறு இராணுவ வீரர்களுக்கு அறிவிப்பு

சினிமா பாணியில் நீதிமன்றுக்குள் நுழைந்துள்ள துப்பாக்கிதாரி – கொலையுடன் தொடர்புடைய இருவர் அடையாளம் காணப்பட்டனர்!

சஞ்சீவ கொலை, துப்பாக்கிதாரி தொடர்பில் மற்றொரு தகவல்- பிரதான சந்தேகநபர் கைது!

யாழ்ப்பாணத்தில் பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் பதற்றம்!

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை : கொலைகாரனை காதலனாக மாற்றியுள்ள இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை : கொலைகாரனை காதலனாக மாற்றியுள்ள இலங்கை

யாழில் சுகாதார சீர்கேடான முறையில் கொத்து தயாரித்த உணவகத்திற்கு எதிராக நடவடிக்கை

யாழில் சுகாதார சீர்கேடான முறையில் கொத்து தயாரித்த உணவகத்திற்கு எதிராக நடவடிக்கை

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular