Friday, February 7, 2025
HomeHeadlinesபுதிய அரசாங்கம் பணம் அச்சிடப்பட்டதா? உண்மை நிலவரம் என்ன?

புதிய அரசாங்கம் பணம் அச்சிடப்பட்டதா? உண்மை நிலவரம் என்ன?

srilanka economy news business money print 2715

புதிய அரசாங்கத்தின் கீழ் பணம் அச்சிடப்பட்டதாக வெளியான செய்திகள் போலியானவை என அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் பணத்தை அச்சிடவோ அல்லது வெளிநாடுகளிலோ அல்லது வேறு நிறுவனங்களிலோ கடன் பெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (29) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

புதிய அரசாங்கத்தின் கீழ் பணம் அச்சிடப்பட்டிருந்தால், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, நிதியமைச்சராக கையொப்பமிட்டிருக்க வேண்டும்.

அவ்வாறு ஜனாதிபதியின் கையொப்பமிடப்பட்ட நாணயத்தாள்கள் வெளியிடப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஒரு பில்லியன் நாணயத் தாள்கள் அச்சிடப்பட்டுள்ளதாக பரவி வரும் செய்தி போலியானதென அவர் இதன்போது குறிப்பிட்டார்.

srilanka economy news business money print 2715

இவைகளையும் படியுங்கள்:

அரசியல் கலாசாரத்தை மாற்ற வேண்டும் – ஜனாதிபதி!

முட்டை விலை குறைவடைந்துள்ளது

இஸ்ரேலின் தாக்குதல்களை குறைவாக மதிப்பிட முடியாது!

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்!

கடவுள் மறுப்பு, குடும்ப அரசியல், பிளவுவாத அரசியல்’ -தொண்டர்களைப் பார்த்து கண்கலங்கிய விஜய்

இந்தியா - கனடா, காலிஸ்தான்

கனடாவில் ‘காலிஸ்தான்’ ஆதரவு எந்த அளவு இருக்கிறது? அரசியலில் அவர்களின் பங்கு என்ன? பிபிசி கள ஆய்வு

8 நிமிடங்களுக்கு முன்னர்

"பால்கனியில் விளையாடி கொண்டிருந்தேன்": இஸ்ரேல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட லெபனான் சிறுவன்

காணொளி,லெபனானில் இஸ்ரேல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுவன், கால அளவு 2,27

துபாய், விசா

துபாய் செல்ல இனி விசா வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை – ஏன் தெரியுமா?

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular