srilanka tea estate workers diwali advance rupees 20000
பெருந்தோட்ட பணியாளர்களுக்கான தீபாவளி முற்பணம் 10000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரச பெருந்தோட்ட நிறுவனங்களினால் வருடாந்தம் வழங்கப்படும் பண்டிகை முற்பணம் 10000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
பெருந்தோட்ட பணியாளர்களுக்கு ரூ.20,000
எரிவாயு தட்டுப்பாடு இன்னும் இரண்டு நாட்களில் நீங்கும்!
அரச பெருந்தோட்ட நிறுவனம், எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனம் மற்றும் மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபையின் கீழ் நிர்வகிக்கப்படும் பெருந்தோட்ட நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இந்த முற்பணம் பெற்றுக் கொடுக்கப்படுகிறது.
இதற்கு முந்தைய வருடங்களில் 10000 ரூபாயாக வழங்கப்பட்ட பண்டிகை முற்பணம் தற்போது 20000 ரூபாயாக வழங்கப்படவுள்ளது.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி, பணியாளர்களின் கொள்வனவுக்கான சாத்தியம் என்பவற்றைக் கருத்திற்கொண்டு இந்த முற்பணம் அதிகரிப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல், வனஜீவராசிகள், வனவள, பெருந்தோட்ட மற்றும் உட்கட்டமைப்பு வசதி அமைச்சிள் செயலாளர் பீ.கே. பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
srilanka tea estate workers diwali advance rupees 20000

தீபாவளி ஏன் கொண்டாடப் படுகிறது? வட இந்தியா, தென் இந்தியாவில் மாறுபடும் கதைகள் என்ன?
தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுவதற்கான காரணமாகப் பல்வேறு கதைகள் சொல்லப்படுகின்றன.
அவற்றில் சில கதைகள் மிகப் பிரபலமானவை.
இந்தியா, இலங்கை உள்ளிட்ட தமிழர்கள் செறிந்து வாழும் நாடுகளில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை, அல்லது ஒரே பண்டிகையாக தீபாவளி பண்டிகையைச் சொல்ல முடியும்.
இந்த தீபாவளி பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது என்பது குறித்து பல கதைகள் இந்தியா முழுவதும் வழங்கப்பட்டு வருகின்றன. அதில் சில பிரபலமான கதைகள் இங்கே.
1. ராமாயணத்தில் தீபாவளி
வட இந்தியாவின் பெரும் பகுதிகளில் தீபாவளிப் பண்டிகை ராமாயணத்துடன் தொடர்புபடுத்தப்படுகிறது.
வனவாசம் செல்லும் ராமர், லட்சுமணன், சீதை ஆகியோர் தங்கள் வனவாசத்தை முடித்துக்கொண்டு, அயோத்திக்குத் திரும்பும் தினமே தீபாவளியாக கருதப்படுகிறது. ராவணனை வெற்றிகொண்டு, சீதையை மீட்டு அயோத்திக்கு ராமர் திரும்புவது என்பது, தீமையை நன்மை வெற்றிகொள்வதன் அடையாளமாகக் காட்டப்படுகிறது.
தங்கள் அரசனான ராமர், லட்சுமணன், சீதை ஆகியோரை வரவேற்க அயோத்தி நகர மக்கள் வீடுகளை அலங்கரித்து, வீட்டு வாசலில் விளக்கேற்றினார்கள் என்றும், அதனையே இப்போது தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவோர் அனைவரும் செய்கின்றனர் என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால், வால்மீகி ராமாயணம் ராமனுக்காக நகரம் தயாரானதைக் குறிப்பிடுகிறதே தவிர, அதே முறையில் பின்னாளில் கொண்டாடப்பட வேண்டும் என்பதாகக் கூறவில்லை.

2. கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்த தினம்
தென்னிந்தியாவில் இந்தப் பண்டிகை நரகாசுர வதத்தோடு தொடர்புபடுத்தப்படுகிறது.
நரகாசுரனின் பிறப்பு குறித்து ஒவ்வொரு புராணமும் ஒவ்வொரு விதமாகக் குறிப்பிட்டாலும், பொதுவான கதை, பூமாதேவிக்கும் விஷ்ணுவின் அவதாரமான வராகத்திற்கும் பிறந்தவன்தான் நரகாசுரன். நரகாசுரனை அவனுடைய தாயைத் தவிர வேறு யாராலும் கொல்ல முடியாது என பிரம்மா வரம் வழங்குகிறார். மிகுந்த பலசாலியான நரகாசுரன், ஒரு கட்டத்தில் தேவலோகத்தையும் வெல்கிறான். இந்திரன் உள்ளிட்டவர்கள் விஷ்ணுவிடம் அது குறித்து முறையிட, தான் அவனை அவதாரம் எடுத்துக் கொல்வதாக வாக்களிக்கிறார் அவர்.
அதன்படி விஷ்ணு, கிருஷ்ணராகவும் பூமாதேவி சத்யபாமாவாகவும் அவதாரம் எடுக்கின்றனர். நரகாசுரனின் அட்டகாசம் அதிகரித்துக்கொண்டேபோக, தன் மனைவி சத்யபாமாவுடன் கருடன் மீது ஏறி தாக்குதலைத் தொடங்குகிறார் கிருஷ்ணர். பல்வேறு அஸ்திரங்களை நரகாசுரனின் படைகள் மீது ஏவி, அவற்றை அழிக்கிறார். நரகாசுரனும் பல்வேறு அஸ்திரங்களை கிருஷ்ணர் மீது ஏவுகிறான். ஒரு கட்டத்தில் திரிசூலத்தை ஏவ, அதில் தாக்கப்படும் கிருஷ்ணர் மயங்கியதைப் போல நடிக்கிறார். இதையடுத்து, சத்யபாமா நரகாசுரனை தாக்கி வீழ்த்துகிறார். கிருஷ்ணர் தனது சுதர்ஸன சக்கரத்தை ஏவி, நரகாசுரனைக் கொல்கிறார்.
பாகவத புராணத்தில் நரகாசுரன் பற்றிய குறிப்புகள் இருந்தாலும் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த காளிகா புராணம்தான் நரகாசுரனைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. மேலும், அசாம் மாநிலத்தில் நரகாசுரனைப் பற்றிய கதைகள் பிரபலமாக உள்ளன.
இருந்தபோதும், தென் மாநிலங்களில் நரகாசுரன் தீபாவளியுடன் இணைக்கப்பட்டிருக்கிறார். தான் இறக்கும் முன்பாக, தான் கொல்லப்பட்ட தினத்தை வண்ண விளக்குகளோடு கொண்டாட வேண்டுமென தன் தாயைப் பார்த்துக் கேட்டதாகவும் சத்யபாமா அந்த வரத்தை வழங்கியதையடுத்தே, அந்த தினம் வண்ண விளக்குகள், வாணவேடிக்கைகளோடு தீபாவளிப் பண்டிகையாகக் கொண்டாடப்படுவதாகவும் கருதப்படுகிறது. இந்தக் கதையும் தீமையை நன்மை வெல்வதை அடிப்படையாகக் கொண்டது.
3. பாண்டவர்களின் வருகையும் தீபாவளியும்
ராமாயண காலத்திற்குப் பிந்தைய காலத்தில் நடப்பதாகக் காட்டப்படும் மகாபாரதத்தோடும் தீபாவளிப் பண்டிகை தொடர்புபடுத்தப்படுகிறது. பாண்டவர்களை கௌரவர்கள் சூதாட்டத்தில் வென்ற பிறகு, அவர்கள் 12 ஆண்டுகள் வனவாசம் செய்ய வேண்டும் என்றும் ஒரு ஆண்டு யாருக்கும் தெரியாத வகையில் வசிக்க வேண்டும் எனவும் விதிக்கப்பட்டது. இந்த 13 ஆண்டு கால வனவாசம் நிறைவுபெற்றதும் பண்டவர்கள் தங்கள் நாட்டிற்குத் திரும்ப வருகின்றனர்.
அவர்களது வருகையை அறிந்த மக்கள் ஆனந்தமடைந்து, வீடுகளையும் வீதிகளையும் அலங்கரித்தனர். வீட்டு வாயிலில் தீபங்களை ஏற்றி பாண்டவர்களை வரவேற்றதாகவும் அந்த தினமே தீபாவளியாக கொண்டாடப்படுவதாகவும் ஒரு கதை உண்டு. இந்தக் கதை மிகப் பெரிய அளவில் பிரபலமாகாத ஒரு நம்பிக்கை.
காரணம், 13 ஆண்டுகால வனவாசம் முடிந்த பிறகு, விராடனுக்குச் சொந்தமான உபப்பிலாவியம் என்ற ஊரில் இருந்து, பாண்டவர்கள் கௌரவர்களுக்கு தூது அனுப்பி தங்கள் நாட்டை திரும்பக் கேட்கிறார்களே தவிர, உடனடியாக நாட்டிற்குள் நுழையவில்லை. பாண்டவர்களின் கோரிக்கையை துரியோதனன் ஏற்க மறுக்கவே, குருட்சேத்திரப் போர் வெடிக்கிறது. போர் முடிந்த பிறகு, பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்திற்குள் நுழைகிறார்கள் என்றாலும் அந்தச் சூழல் அவ்வளவு மகிழ்ச்சியான சூழலாக இல்லை.

4. திருமகளின் வருகையைக் குறிக்கும் தீபாவளி
செல்வங்களின் கடவுளான லட்சுமிக்கு தீபாவளிக் கொண்டாட்டத்தில் முக்கியப் பங்கு இருக்கிறது. பல இடங்களில், லக்ஷ்மியின் பிறப்போடும் தீபாவளி தொடர்புபடுத்தப்படுகிறது. தேவலோகத்தில் இந்திரன் ஆணவத்துடன் செயல்படுவதால், லட்சுமி அங்கிருந்து நீங்கி, பாற்கடலில் தஞ்சமடைகிறாள்.
இதனால் எல்லா உலகங்களும் இருளில் மூழ்குகின்றன. இதையடுத்து, பாற்கடலைக் கடைந்து லக்ஷ்மியைத் தேட முடிவெடுக்கிறார்கள் தேவர்கள். அதன்படி ஆயிரமாண்டுகள் பாற்கடலைக் கடைந்த பின் லக்ஷ்மி ஒரு தாமரை மலரின் மீது அமர்ந்தபடி மீண்டும் தோன்றுகிறாள்.
இது ஒரு அமாவாசை தினத்தன்று நடக்கிறது என்று இக்கதை கூறுகிறது. இப்படி, செல்வத்தின் கடவுளான லட்சுமி, மீண்டும் தோன்றிய நாள், செல்வம் தங்களது இல்லத்திற்கு வரும் நாள் என்று கருதியும் தீபாவளி கொண்டாடப்படுகிறது.
இவைகளையும் படியுங்கள்:
அரசியல் கலாசாரத்தை மாற்ற வேண்டும் – ஜனாதிபதி!
இஸ்ரேலின் தாக்குதல்களை குறைவாக மதிப்பிட முடியாது!
பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்!
கடவுள் மறுப்பு, குடும்ப அரசியல், பிளவுவாத அரசியல்’ -தொண்டர்களைப் பார்த்து கண்கலங்கிய விஜய்
காணொளி,கமல் ஹாசன், சல்மான் கானுடன் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்ட காஜல் அகர்வால், கால அளவு 1,10
தீபாவளி: தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க முடியாதது ஏன்?
கனடாவில் ‘காலிஸ்தான்’ ஆதரவு எந்த அளவு இருக்கிறது? அரசியலில் அவர்களின் பங்கு என்ன? பிபிசி கள ஆய்வு
8 நிமிடங்களுக்கு முன்னர்

காணொளி,லெபனானில் இஸ்ரேல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுவன், கால அளவு 2,27
