Special circular legal action onpolice officers 5805
முறைப்பாடு அளிக்க பொலிஸ் நிலையங்களுக்கு வரும் தரப்பினரிடமிருந்து முறைப்பாடுகளை ஏற்க மறுக்கும் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்ட பதில் பொலிஸ்மா அதிபர், ஒழுக்காற்று நடவடிக்கைக்கு மேலதிகமாக, பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் விதிகளின்படி அத்தகைய அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பும் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடு அளிக்க வரும் தரப்பினரிடம், முறைப்பாடுகளை ஏற்காமல், பல்வேறு காரணங்களைக் கூறி நிராகரிக்கப்படுவதாக எழுத்துப்பூர்வமாகவும், வாய்மொழியாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரியந்த வீரசூரிய குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் நிலையப் பொறுப்பாளர்களும் பிற அதிகாரிகளும் இத்தகைய மறுப்புக்கு பல்வேறு காரணங்களை முன்வைப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் தனது சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் நிலையங்களுக்கு கிடைக்கும் முறைப்பாடுகளை பதிவுசெய்து விசாரணை செய்வது பொலிஸ் அதிகாரிகளின் கடமையும் பொறுப்பும் ஆகும் என்றும் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய வலியுறுத்தியுள்ளார்.
அதன்படி, இனிமேல், பொலிஸ் நிலையங்களுக்கு கிடைக்கும் எந்தவொரு முறைப்பாட்டையும் ஏற்றுக்கொள்ளாமல் நிராகரிக்க முடியாது என்று பதில் பொலிஸ்மா அதிபர் வெளியிட்ட சுற்றறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Special circular legal action onpolice officers 5805

இதையும் படியுங்கள்
கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் விலை குறையும்!
மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!
பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை
வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?
இறக்குமதி வாகனங்களுக்கு ஆடம்பர வரி விதிக்கப்படுவது இப்படித்தான்

வரலாற்று தோல்வியை சந்தித்த இலங்கை அணி!
