Monday, February 10, 2025
HomeCinema Newsகேரவனிலிருந்து ஓடிய பிரகாஷ் ராஜ் - 1 கோடி ரூபாய் நஷ்டம் அப்படி என்ன நடந்தது!

கேரவனிலிருந்து ஓடிய பிரகாஷ் ராஜ் – 1 கோடி ரூபாய் நஷ்டம் அப்படி என்ன நடந்தது!

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், அரசியல் பிரமுகர் என பல கோணங்களில் செயற்பட்டு வருபவர் பிரகாஷ் ராஜ்.

அனைத்து மொழிப்படத்திலும் பிஸியாக நடித்து வரும் இவர், படப்பிடிப்பு தளத்தில் திடீரென கேரவனில் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் சென்றுவிட்டதால், ஒரு கோடி ரூபாய் நஷ்டமடைந்ததாக தயாரிப்பாளர் ஒருவர் புகார் கூறியுள்ளார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் சிறந்த நடிகராக மட்டுமில்லாமல், சமூக கருத்துக்களை துணிச்சலுடன் சொல்லும் அரசியல்வாதியாகவும். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் இருக்கும் போட்டோவை பகிர்ந்து, ” துணை முதல்வருடன்… #justasking” என்று எழுதினார்.

தயாரிப்பாளர் வினோத் குமார்: இந்த ட்வீட்டை பார்த்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான வினோத் குமார் தனது எக்ஸ் தள பக்கத்தில், பிரகாஷ் ராஜ் குறித்து பரபரப்பான குற்றச்சாட்டு ஒன்றை கூறி இருக்கிறார்.

அதில், நான் விஷால் மற்றும் ஆர்யா நடித்த எதிரி என்ற படத்தையும், விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடித்த மார்க் ஆண்டனி படத்தையும் தயாரித்து இருக்கிறேன்.

படப்பிடிப்பின் போது, கேரவேனில் இருந்த பிரகாஷ் ராஜ் எந்த தகவலும் சொல்லாமல் படப்பிடிப்பில் இருந்த வெளியேறிவிட்டார். இதனால், எனக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.

ஒரு கோடி நஷ்டம்: இது செப்டம்பர் 30/2004 ந் திகதி நடந்தது, அன்று ஒட்டுமொத்த நடிகர்களும் படக்குழுவினரும் திகைத்து போனோம்.

படப்பிடிப்புக்காக கிட்டத்தட்ட 1000 ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள். அனைவருக்கும் 4 நாள் நிகழ்ச்சி நிரல் வழங்கப்பட்டிருந்தது.

வேறு சில தயாரிப்பில் இருந்து அழைப்பு வந்ததால், கேரவனிலிருந்து யாரிடமும் சொல்லாமல் வெளியேறிவிட்டீர்கள்.

எங்களுக்கு அந்த நேரத்தில் என்ன செய்வது என்றே தெரியவில்லை. அன்று படப்பிடிப்பு நடக்காமல் போனதால் எனக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.

அப்படி சென்றதற்கு என்ன காரணம்? நீங்கள் என்னை அழைப்பதாகச் சொன்னீர்கள், ஆனால் இதுவரை என்னை அழைக்கவில்லை என அந்த ட்விட்டரில் புலம்பி உள்ளார்.

வினோத் குமார் மேலும் கூறுகையில், தனது தாய் மாநிலத்தில் தேர்தலில் டெபாசிட் இழந்த ஒரு ஜோக்கர் வெற்றியாளர் மேடையில் #Justasking பங்கேற்பதில் பெருமை கொள்கிறார் என அவரை மறைமுகமாக தாக்கி உள்ளார்.

தயாரிப்பாளரின் இந்த ட்வீட்டுக்கு பிரகாஷ் ராஜ் இதுவரை எந்த விதமான பதிலும் அளிக்கவில்லை.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular