People protest Grama Sevak refused provide food 3746
பருத்தித்துறையில் வெள்ள அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையத்திலிருந்த குடும்பங்கள் சிலவற்றிற்கு கிராம சேவகர் உணவு வழங்காமையால் நேற்று கற்கோவளம் கிராம மக்களுக்கும், கிராம அலுவலருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், தனது கடமைக்கு இடையூறு விளைவித்தார்கள் என்று கிராம சேவகர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாடு காரணமாக இருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கிராம சேவகரால் பாதிக்கப்பட்டவர்கள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இதில் தமது வீட்டில் மழை வெள்ளம் தேங்கியதால் தாம் நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்ததாகவும், அங்கு கிராம சேவகர் வேண்டுமென்று தம்மை புறக்கணித்து தமக்கு உணவு வழங்கவில்லை என்றும் முறையிட்டனர்.

இதனை கிராம சேவகரிடம் கேட்டமையாலேயே கிராம சேவகரது கடமைக்கு இடையூறு விளைவித்ததாக தெரிவித்து இருவர் கைது செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலரிடம் கேட்டபோது பக்கச்சார்பற்ற விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டு உரிய நடவடிக்கை ஏடுக்கப்படும் என்று தெரிவித்ததுடன், ஏதாவது முறைகேடுகள் இடம்பெற்றால் உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதேவேளை சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் நிலைமைகளை பேசி தீர்த்துவைத்ததுடன், உரியவர்கள் மீது பக்கச்சார்பற்ற விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
People protest Grama Sevak refused provide food 3746
இதையும் படியுங்கள்
அம்பாறை விபத்து – அதிபர், ஆசிரியர் விளக்கமறியலில்!
யாழ். ராணி புகையிரத சேவை மறு அறிவித்தல் வரை
வௌ்ளத்தால் 4 இலட்சம் பேர் பாதிப்பு!
ஆழ்ந்த தாளமுக்கத்தின் தற்போதைய நிலை!
கரையை கடக்கும் புயல்..! விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை..!
155 வருடங்கள் பழமையான மட்டக்களப்பு வளிமண்டலவியல் திணைக்களம்!
சீரற்ற காலநிலையால் லாஃப் எரிவாயுக்கு தட்டுபாடு!
பெரிய வெங்காயத்தின் விசேட சரக்கு வரி குறைப்பு!
திருவண்ணாமலையில் மண் மற்றும் பாறை சரிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சிக்கியது எப்படி?

சம்பல் வன்முறை: உள்ளூர் இந்து-முஸ்லிம் உறவில் எந்தளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது?
