Opposition parties United Peoples Alliance 5792
ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல ஒன்றிணைந்து எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் தொலைபேசி சின்னத்தின் கீழ் போட்டியிடுவது தொடர்பில் தற்போது தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் கடந்த தினங்களில் கலந்துரையாடியதாகவும் அங்கு குறித்த கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையின் கீழ் ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைந்து தேர்தல் பிரசாரத்தை முன்னெடுப்பது தொடர்பில் இணக்கப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்குள் ஐக்கிய மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தலைமையிலான குழு ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் தொடர்நது கலந்துரையாடல் நடத்தி வந்துள்ளன.
அடிமட்டக் கட்சி உறுப்பினர்கள் இணைந்து மறுசீரமைத்து தேர்தலுக்கு தயாராக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியுடனான கலந்துரையாடல்களின் போது, இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது தொடர்பான அடிப்படை உடன்பாட்டை எட்டியதாக ஐக்கிய மக்கள் சக்திகளின் பொதுச் செயலாளர் அண்மையில் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
Opposition parties United Peoples Alliance 5792

இதையும் படியுங்கள்
கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் விலை குறையும்!
மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!
பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை
வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?
இறக்குமதி வாகனங்களுக்கு ஆடம்பர வரி விதிக்கப்படுவது இப்படித்தான்

வரலாற்று தோல்வியை சந்தித்த இலங்கை அணி!
