nayanthara danush actors wishes to rajnikanth 4029
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் #HBDSuperstarRajinikanth என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நயன்தாரா மற்றும் தனுஷ் ஆகிய இருவரும் ஐந்து நிமிட இடைவெளியில், அடுத்தடுத்து வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.
குறிப்பாக, அந்த வாழ்த்து செய்தியில் கிட்டத்தட்ட ஒரே வார்த்தைகள் உள்ளதை பார்த்து, ரசிகர்கள் “இதில் கூட போட்டியா?” என்று கமெண்டில் பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று மதியம் 12:29 மணிக்கு, நயன்தாரா தனது சமூக வலைதளத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அதற்கு ஐந்து நிமிடம் கழித்து, அதாவது 12:34 மணிக்கு, தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இருவரது வாழ்த்து செய்தியில் உள்ள வார்த்தைகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதை பார்த்து, இது தற்செயலாக நடந்ததா? அல்லது போட்டிக்காக வாழ்த்து பதிவு செய்யப்பட்டதா? என்று, தனுஷ் மற்றும் நயன்தாரா ரசிகர்கள் இடையே வாக்குவாதம் நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே, நடிகர்களான சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின், ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.


இசையமைப்பாளர் டி.இமான் அன்னாத்த பிஜிஎம் உடன் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நடிகையான சாக்ஷி அகர்வால் ரஜினியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
nayanthara danush actors wishes to rajnikanth 4029
மீன்களின் விலை சடுதியாக அதிகரிப்பு!
பசறையில் கிடைத்த நீலநிற மாணிக்கம்

மூன்றரை இலட்சம் ரூபா இலஞ்சம் வாங்கிய பெண் கைது
