Myanmar refugees return Mullaitivu 12 in prison 4415
மியன்மார் அகதிகள் மீண்டும் முல்லைத்தீவு கேப்பாப்புலவு விமானப் படைத்தளத்திற்கு நேற்று மாலை அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்பரப்பில் கடந்த 19 ஆம் திகதி 115 பயணிகளுடன் மியன்மார் அகதிகளின் படகு கரை ஒதுங்கியிருந்தது.

பின்னர் ரோலர் கரைக்கு வர முடியாத காரணத்தால் கடற்படையினரின் உதவியுடன் திருகோணமலை கடற்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் அவர்கள் திருகோணமலை ஜமாலிய முஸ்லீம் மகாவித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
மகிந்த ராஜபக்சவிற்கு ISIS அமைப்பினால் ஆபத்து!
சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்த மூன்று மறுசீரமைப்புகள் மிக அவசியம் – ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு!

பின்னர் தஞ்சம் கோரிய 115 முஸ்லீம் இனத்தினை சேர்ந்த மியன்மார் அகதிகளும் மிரிஹான இடைத்தங்கல் முகாமில் தங்கவைப்பதற்கான இடவசதி இல்லாத காரணத்தினால் இவர்களில் 103 பேர் இரண்டு பேருந்துகளில் மீண்டும் முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படை தளம் ஒன்றில் தற்காலிகமாக தங்கவைக்க அழைத்து வரப்பட்டுள்ளனர்.
குறித்த படகில் 45 சிறுவர்கள், 24 பெண்கள், 46 ஆண்கள் உள்ளடங்கலாக 115 பேர் பயணித்துள்ளார்கள்.

இதனால் கடந்த 21.12.2024 அன்று இவர்கள் மீது சட்டவிரோதமாக இலங்கை கடலுக்குள் நுழைந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு இவர்கள் திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அதில் சட்டவிரோத படகு பயணத்திற்கு மூல காரணமான 12 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.

Myanmar refugees return Mullaitivu 12 in prison 4415
இதையும் படியுங்கள்
ஒப்பந்தங்களை மீறிய பெண் நாடு கடத்தல் – பலரை நாடு கடத்த நடவடிக்கை!
யாழில் எலிக்காய்ச்சலால் பிறிதொருவர் உயிரிழப்பு- பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!
சாலையோரத்தில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது மோதிய லொறி – மூன்று சிறுவர்கள் பலி!
செல்ஃபி மோகத்தால் பலியான தாயும், மகளும் – அனுராதபுரத்தில் சம்பவம்!

இயல்பான பாலுறவை ஆபாச படங்கள் எப்படி மாற்றுகின்றன? உலகை உலுக்கிய பிரான்ஸ் பாலியல் வழக்கு உணர்த்துவது என்ன?
இந்தியாவுடன் ‘எட்கா’ உடன்படிக்கையில் கைச்சாத்திட இலங்கையில் எதிர்ப்பு ஏன்?