jeevan met people affected disasters 3703
கடந்த சிலலநாட்களாக நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியிருந்தார்கள். அந்த வகையில் நுவரெலியா மாவட்டத்திலும் மக்கள் அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்திருந்தார்கள்.
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் பாதிப்புக்குள்ளான பிரதேசங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவர்களுக்கான உலர் உணவு பொருட்களையும் வழங்கி வைத்தார்.



இதில் முதற்கட்டமாக நுவரெலியா மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளான டிக்கோயா, பொகவந்தலாவ, அக்கரபத்தனை ஆகிய பகுதி மக்களுக்கான நிவாரன பொதிகள் நேற்றைய தினம் (30) வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் பாதிப்புக்குள்ளான மக்களுக்கான தேவையான ஏற்பாடுகளை செய்துக் கொடுக்குமாறும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.


இதன்போது நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான், பிரதி தலைவர் அனுஷா சிவராஜா, போசகர் சிவராஜா, தொழிற்சங்கபிரிவு தேசிய அமைப்பாளர் லோகதாஸ், உபத்தலைவர் சச்சுதானந்தன் காரியாலய உத்தியோகஸ்த்தர்கள் உட்பட பலர் சென்றிருந்தனர்.
jeevan met people affected disasters 3703
இதையும் படியுங்கள்
மன்னம்பிட்டி ஊடான போக்குவரத்து!
அம்பாறை விபத்து – அதிபர், ஆசிரியர் விளக்கமறியலில்!
யாழ். ராணி புகையிரத சேவை மறு அறிவித்தல் வரை
வௌ்ளத்தால் 4 இலட்சம் பேர் பாதிப்பு!
ஆழ்ந்த தாளமுக்கத்தின் தற்போதைய நிலை!
இலங்கை அணிக்கான வெற்றி இலக்கு!
கரையை கடக்கும் புயல்..! விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை..!
தமிழ் நாட்டில் பெங்கல் புயலின் தீவிரம் – சிவப்பு அபாய எச்சரிக்கை!
எழுச்சிமிக்க அரசியல் இயக்கம் சர்வஜன அதிகாரமே!

காலாவதியான பெருமளவு பொருட்கள் சிக்கின
