Monday, February 10, 2025
HomeLocal Newsதமிழ் நாட்டில் பெங்கல் புயலின் தீவிரம் - சிவப்பு அபாய எச்சரிக்கை!

தமிழ் நாட்டில் பெங்கல் புயலின் தீவிரம் – சிவப்பு அபாய எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் தோன்றிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபெங்கல் ’(Fenjal strome) புயலாக வலுப்பெற்றுள்ளதுடன் , இந்தியாவின் – தமிழ்நாடு உள்ளிட்ட பல பிரதேசங்கள் கனமழையினால் பாதிப்புக்குள்ளாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் பகுதிகளில் மணிக்கு 70 முதல் 80 கி.மீ தொடக்கம், 80 முதல் 90 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்வு கூறியுள்ளது.

இப் புயலானது புதுச்சேரி அருகில் இன்று பிற்பகல் கரையை கடக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.மேலும் இதன் காரணமாக, தமிழ்நாட்டின் சென்னை உட்பட 7 மாவட்டங்களில் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இத்தகைய நிலையில், தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் அதிகபட்சமாக 65 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் எனவும் , ஆகவே, இப்பகுதிகளுக்கு கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது, சென்னையிலிருந்து தென்கிழக்கு திசையில் 190 கிலோ மீட்டர் தொலைவிலும்,

புதுச்சேரியில் இருந்து கிழக்கு திசையில் 180 கிலோ மீட்டர் தொலைவிலும்,

நாகப்பட்டினத்தில் இருந்து வடகிழக்கு திசையில் 210 கிலோ மீட்டர் தொலைவிலும்புயல் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம், கூறியுள்ளது.

மேலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன குறிப்பிடத்தக்கது ஆகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular