Saturday, February 8, 2025
HomeForeign Newsகனடாவிலுள்ள சர்வதேச மாணவர்கள் தொடர்பில் வெளியான அறிவித்தல்!

கனடாவிலுள்ள சர்வதேச மாணவர்கள் தொடர்பில் வெளியான அறிவித்தல்!

international students canada

கனடாவிலுள்ள (Canada) சர்வதேச மாணவர்கள் கல்வியை தொடர்வதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மாணவர்கள் கனடாவின் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்று வருகின்றனர்.

இந்தநிலையில், அண்மையில் மத்திய அரசாங்கம் வெளிநாட்டு மாணவர்கள் தொடர்பில் கடுமையான நடைமுறைகளை பின்பற்றுவதாக அறிவித்திருந்தது.

இதனடிப்படையில், இதில் பிரதானமாக மாணவர் விசா தொடர்பில் கடுமையான நடைமுறைகள் முன்னிலைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக சர்வதேச மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கனடிய பல்கலைக்கழகங்களில் கற்று வரும் மாணவர்கள் இந்த நெருக்கடியினால் தங்களது கல்வியை உரிய முறையில் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

விசா வழங்குவதில் காணப்படும் தாமத நிலைமைகளினால் மாணவர்கள் பாதிப்புகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளதுடன் இதனால் மாணவர்கள் தங்களது கல்வி ஆண்டுக்கான கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

வீட்டுப் பிரச்சினை மற்றும் தங்குமிட பிரச்சினை போன்ற காரணிகளினால் மத்திய அரசாங்கம் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கும் விசாக்களை வரையறுக்க தீர்மானித்திருந்த நிலையில் இதனால் அதிக அளவிலான வெளிநாட்டு மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

international students canada

RELATED ARTICLES

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular