Friday, February 7, 2025
HomeForeign Newsஅமெரிக்காவின் அதிக வயதான பெண் காலமானார்!

அமெரிக்காவின் அதிக வயதான பெண் காலமானார்!

அமெரிக்காவின் மிகவும் வயதானவராக கருதப்பட்ட எலிசபெத் பிரான்சிஸ் என்ற பெண் கடந்த செவ்வாய்க்கிழமை தனது 115ஆவது வயதில் அமைதி நிலையில் காலமானார்.

பிரான்சிஸ் இறக்கும் போது உலகின் மூன்றாவது வயதானவராக அவர் கருதப்பட்டார். அவர் 1909 ஜூலை 25இல் பிறந்தவர் ஆவார்.

மேலும் 20 அமெரிக்க ஜனாதிபதிகளின் ஆட்சிக் காலங்களில் அவர் வாழ்ந்துள்ளார். அவர் இறுதிக்காலத்தில் தனது 95 வயது மகள் டோரதி வில்லியம்ஸ் மற்றும் அவரது பேத்தி எத்தேல் ஹரிசனுடன் வசித்து வந்தார்.

அத்துடன், 1970கள் மற்றும் 80களில் ஹஸ்டனில் உள்ள ஒரு தொலைக்காட்சி நிலையத்தில் தேனீர் கடை ஒன்றை அவர் நடத்தி வந்தார்.

பிரான்சிஸுக்கு மூன்று பேரக்குழந்தைகள், ஐந்து கொள்ளுப் பேரக்குழந்தைகள் மற்றும் நான்கு கொள்ளு கொள்ளுப் பேரக்குழந்தைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular