Saturday, July 12, 2025
HomeIndian Newsமாமன்மார் தடுக்க வழுக்கு மரம் ஏறித் தோற்ற மருமகன்கள் - வத்தலக்குண்டு அருகே சுவாரஸ்யம்

மாமன்மார் தடுக்க வழுக்கு மரம் ஏறித் தோற்ற மருமகன்கள் – வத்தலக்குண்டு அருகே சுவாரஸ்யம்

sons in law climbed slippery tree stops uncles 5307

வத்தலக்குண்டு அருகே மருமகன்கள் வழுக்கு மரம் ஏற, மாமன்கள் தடுக்க என வழுக்கு மரம் ஏறும் போட்டி சுவாரசியமாக நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே ப.விராலிப்பட்டி கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாமன் முறை உறவினர்களால் நட்டு வைக்கப்பட்ட வழுக்கு மரத்தில் மருமகன் முறை உள்ளவர்கள் ஏறும் வினோத விளையாட்டு போட்டி நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது.

போட்டியில் மாமன் முறை உள்ளவர்கள் வழுக்கு மரத்தை ஊன்றி அதன் உச்சியில் 11,000 ரூபாயை தொங்க விட்டனர்.

பின்னர், மருமகன், மாப்பிள்ளை உறவு முறை உள்ளவர்களை வழுக்கு மரம் ஏற அழைப்பு விடுத்தனர்.

போட்டிப் போட்டு மருமகன்கள் மரம் ஏற, மாமன்கள் தண்ணீரை ஊற்றி தடுத்தனர்.

மரம் ஏற முடியாமல் வழுக்கி விழுந்த மருமகன்களை, மாமன்கள் பார்த்து ரசித்தனர்.

போட்டிநேரத்திற்குள் மருமகன்கள் மரம் ஏறாததால் மாமன்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மாமன், மருமகன் உறவுகளை கொண்டாடும் விதமாக நடந்த வழுக்கு மரம் ஏறும் போட்டியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

sons in law climbed slippery tree stops uncles 5307

இதையும் படியுங்கள்

நாடாளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவராக சாணக்கியன் தெரிவு.

VAT, SST வரிகளை நீக்கி மாணிக்கக் கல், ஆபரணத் துறையை அபிவிருத்தி செய்ய வேண்டும்!

பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை

வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?

ஐஸ் போதைப்பொருளுடன் நீதிமன்ற ஊழியர் கைது

ஐஸ் போதைப்பொருளுடன் நீதிமன்ற ஊழியர் கைது

குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மூவருக்கு தடுப்புக்காவல் உத்தரவு

குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மூவருக்கு தடுப்புக்காவல் உத்தரவு
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular