Saturday, February 8, 2025
HomeTop Story15 வயதில் வானியற்பியல் சுய ஆய்வு - 3 புத்தகங்களை வெளியிட்டு சாதனை!

15 வயதில் வானியற்பியல் சுய ஆய்வு – 3 புத்தகங்களை வெளியிட்டு சாதனை!

Self study astrophysics achieving chozha record 3892

15 வயதில் வானியற்பியல் தொடர்பாக சுய ஆய்வுகளை மேற்கொண்டு 3 புத்தகங்களை வெளியிட்டு சோழன் உலக சாதனை படைத்த மாணவன் அண்மையில் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு காத்தான்குடியில் வசித்து வரும் முகமத் அமனத் ஆதம் பாவா மற்றும் இனுல் ஹிமியா ஆதம்பாவா ஆகியோரின் மகனான முஹம்மது அமாசீர் முகமது அமானத், காத்தான்குடி அல் ஹிரா மகா வித்தியாலயத்தில் தரம் பத்தில் கல்வி கற்று வருகிறார்.

Self study astrophysics achieving chozha record 3892

வானியற்பியலின் மிகக் கடினமான தலைப்புகளான பிளெக் ஹோல் (Blaek Hole), டார்க் மேட்டர் (Dark Matter), மற்றும் ஜெனரல் ரிலேடிவிடி (Einstein’s Relativity) பற்றி பல ஆய்வுகளை மேற்கொண்டு அவை பற்றி 3 புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.

இப் புத்தகங்களை துறைசார்ந்த நிபுணத்துவம் மிக்க நடுவர்கள் மூலம் ஆராய்ந்த சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனமானது மாணவனது முயற்சிக்கு உலக சாதனைக்கான அங்கீகாரம் வழங்க முன்வந்தது.

இதன் அடிப்படையில் இதற்கான அலுவலக ரீதியிலான நிகழ்வு இன்று (08) காத்தான்குடி அல்ஹிரா மகா வித்தியாலயத்தில் சோழன் உலக சாதனை புத்தகம் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட பொது தலைவர் கதிரவன் இன்பராசா தலைமையில் நடைபெற்றது.

Self study astrophysics achieving chozha record 3892

இந்த நிகழ்வின் போது வானியற்பியல் துறையில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வரும் பொறியியல் நிபுணரான டெரி ரொஜர்ஸ் லியோன் மாணவனிடம் அவருடைய ஆய்வு பற்றி நிறைய கேள்விகள் கேட்டு மாணவனின் திறனை உறுதி செய்தார்.

சோழன் உலக சாதனை படைத்த மாணவன் முகமது அமாசிர் முகமது அமானத்திற்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ் தங்கப்பதக்கம் நினைவுக் கேடயம் அடையாள அட்டை மற்றும் கோவை போன்றன சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட பொது தலைவர் கதிரவன் இன்ப ராசா மட்டக்களப்பு மாவட்ட பொதுச் செயலாளர் சிவ வரதகரன், செயற்குழு உறுப்பினர் டெரி ரொஜர்ஸ் லியோன் மற்றும் மோசஸ் ஜேசுதாசன் போன்றவர்களால் வழங்கிப் பாராட்டப்பட்டது.

Self study astrophysics achieving chozha record 3892

சோழன் உலக சாதனை புத்தக நிறுவனமும் பீப்புல்ஸ் ஹெல்பிங் பீப்பி பவுண்டேஷன் போன்ற அமைப்புகள் இந்த நிகழ்வை இணைந்து நடத்தியிருந்தன.

இச் சிறிய வயதில் வானியற்பியல் துறையில் ஆய்வுப் புத்தகங்களை வெளியிட்டு சோழன் உலக சாதனை படைத்த மாணவனை சிறப்பு விருந்தினர்கள், அப் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் வாழ்த்திப் பாராட்டினார்கள்.

முதன்மை விருந்தினராக ஏறாவூர் வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எம்.ஜவாத் தலைமை உரையாற்றினார்.

Self study astrophysics achieving chozha record 3892

சிறப்பு விருந்தினராக பங்கு கொண்ட காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் எம்.எஸ்.எம்.ஜுபைர் வாழ்த்துரை வழங்கினார்,

காத்தான்குடி மண்டல கல்வி அலுவலர் ஏ.ஜீ.எம். ஹக்கீம், மட்டக்களப்பு மாவட்ட எஸ் எல் டி மொபிடெல் உதவி பொது முகமையாளர் வை.கோபிநாத் போன்றோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கு கொண்டனர்.

Self study astrophysics achieving chozha record 3892

அல் ஹிரா மகா வித்தியாலயத்தின் தலைமை ஆசிரியர் எம்.பி.எம்.ரபீக், மட்டக்களப்பு மத்திய வலய ஐ.எஸ்.ஏ. விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த எம்.பைரூஸ், ஹிலுரியா வித்யாலயா தலைமை ஆசிரியர் அரபாத், காத்தான்குடி மத்திய கல்லூரியின் துணைத் தலைமை ஆசிரியர் ஏ.எல்.எம். சப்ரி, மிலாத் பெண்கள் உயர் நிலைப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் ஜசீமா முஸம்மில், மீரா பாலிகா பள்ளியின் துணைத் தலைமை ஆசிரியர் உல்முன் முபின், காத்தான்குடி ஐ.எம்.எஸ் தலைமை ஆசிரியர் எம்.எச்.எம். ஹசன் அலி, வழக்கறிஞர் ரொஷானி லங்கா முதுகள, காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் மருத்துவர்களான அலிமா ரஹ்மான் மற்றும் எம்.ஹனீஸ் போன்றோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கு கொண்டு சோழன் உலக சாதனை படைத்த மாணவனை வாழ்த்திப் பாராட்டினார்கள்.

Self study astrophysics achieving chozha record 3892

இதையும் படியுங்கள்

அம்பாறை விபத்து – அதிபர், ஆசிரியர் விளக்கமறியலில்!

யாழ். ராணி புகையிரத சேவை மறு அறிவித்தல் வரை

வௌ்ளத்தால் 4 இலட்சம் பேர் பாதிப்பு!

ஆழ்ந்த தாளமுக்கத்தின் தற்போதைய நிலை!

கரையை கடக்கும் புயல்..! விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை..!

‘பார் குமார்’ பெயர் எவ்வாறு மாறியது?: மதுபான அனுமதிப் பத்திரங்கள் பற்றி அரசாங்கம்!

வடக்கு கீழ் பருவப் பெயர்ச்சி!

மீன்களின் விலை சடுதியாக அதிகரிப்பு!

விசேட செய்திகள்

சிரியா தலைநகரை கைப்பற்றிய கிளர்ச்சிப் படை- மத்திய கிழக்கில் பதற்றம்

சிரியா தலைநகரை கைப்பற்றிய கிளர்ச்சிப் படை- மத்திய கிழக்கில் பதற்றம்

சில மாகாணங்களில் 75 மி.மீ மழைவீழ்ச்சி

சில மாகாணங்களில் 75 மி.மீ மழைவீழ்ச்சி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular