Reduction allowance examination duty teachers unrest 3940
பரீட்சை கடமைகளில் ஈடுபட்டுள்ள அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய கொடுப்பனவுகளை முறையாக வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பரீட்சை ஆணையாளரினால் நேற்று (08) வெளியிடப்பட்ட சுற்றறிக்கையினால் போக்குவரத்து கொடுப்பனவுகள் தொடர்பில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக குறித்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து வௌியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த நாட்களில் உயர்தரப் பரீட்சைகள் நடைபெறுகின்றன. பரீட்சை ஆணையாளரினால் வழங்கப்பட்ட இரண்டு கடிதங்களால் பரீட்சை ஊழியர்களுக்கு புதிதாக சிக்கல் எழுந்துள்ளது.
1 கிலோ அரிசியின் மொத்த விலை 225!
2025 நாட்காட்டி அதிக விடுமுறை தினங்கள்!
ரூபிக்ஸ் க்யூபில் அனுரகுமார திசாநாயக்க – சாதனை படைத்த சிறுவன்!
குரங்குகளை விரட்ட புதிய சாதனம்
நவம்பர் மாதம் 1ஆம் திகதி முதலாவது கடிதம் வழங்கப்பட்டது.
அந்த கடிதத்தின்படி, பரீட்சை மண்டபத்தில் இருந்து பயணிக்கும் தூரம் 10 கிலோமீற்றருக்கு அதிகமாக இருந்தால் 1000 ரூபாய் செலுத்த முடிவு செய்யப்பட்டது.
டிசம்பர் மாதம் 8ஆம் திகதி பரீட்சை ஆணையாளரால் மற்றொரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதன்படி 1000 ரூபாயாக இருந்த போக்குவரத்து கொடுப்பனவு 500 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், 5 முதல் 10 கிலோமீற்றர் இடைப்பட்ட தூரத்திற்காக 750 ரூபாய் முன்னதாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் அது தற்போது 400 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், 2 முதல் 5 கிலோமீற்றருக்க 500 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது அது 300 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், 2 கிலோமீற்றருக்கு குறைவாக இருந்தால் 300 ரூபாய் வழங்குவதாகவும், அது தற்போது 200 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு பரீட்சை கண்காணிப்பாளருக்கும் கொடுப்பனவு வழங்க வேண்டுமென கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், தற்போது புதிய கடிதமொன்று வௌியிடப்பட்டு இவ்வாறு கொடுப்பனவு குறைக்கப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பில் அனைவரும் குழப்பத்தில் இருக்கின்றனர்.
Reduction allowance examination duty teachers unrest 3940
இதையும் படியுங்கள்
அம்பாறை விபத்து – அதிபர், ஆசிரியர் விளக்கமறியலில்!
யாழ். ராணி புகையிரத சேவை மறு அறிவித்தல் வரை
வௌ்ளத்தால் 4 இலட்சம் பேர் பாதிப்பு!
ஆழ்ந்த தாளமுக்கத்தின் தற்போதைய நிலை!
கரையை கடக்கும் புயல்..! விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை..!
‘பார் குமார்’ பெயர் எவ்வாறு மாறியது?: மதுபான அனுமதிப் பத்திரங்கள் பற்றி அரசாங்கம்!
மீன்களின் விலை சடுதியாக அதிகரிப்பு!
இந்தியா – சிரியா உறவு எப்படிப்பட்டது? நேரு பயணத்தின் போது நடந்தது என்ன?

சிரியா: அசாத் மாஸ்கோவில் இருப்பதாக கூறும் ரஷ்ய அரசு ஊடகம்
