provincial council elections mid 2025 4633
1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல் சட்டத்தின் கீழ், 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்தம்) சட்டத்தை இரத்துச் செய்வதன் மூலம் நீண்ட காலமாகத் தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தலை அடுத்த ஆண்டு நடுப் பகுதியில் நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தலைத் தொடர்ந்து, திருத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தல் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அரசு குறிப்பிட்டுள்ளது.
இந்த விடயம் சம்பந்தமாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் பிரதி அமைச்சர் பிரபா ருவான் செனரத் தெரிவிக்கையில்,
“2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், மாகாண சபைத் தேர்தல் முறையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட திருத்தங்களை இரத்துச் செய்து பழைய மாகாண சபைத் தேர்தல் முறைக்கு மாற்றுவதற்கான பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களுக்குப் பிறகுதான் மாகாண சபைத் தேர்தல்களை எதிர்பார்க்க முடியும். எனினும், சட்டத்தில் பொருத்தமான திருத்தங்களை அறிமுகப்படுத்தாவிட்டால் நாங்கள் மாகாண சபைகளுக்கான தேர்தல் செயற்பாடுகளைத் தொடர முடியாது.
பிரபல நடிகர் மரணம்.. ஹோட்டல் அறையிலிருந்து சடலமாக மீட்பு!
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மீண்டும் போராட்டம்!
ஜேர்மன் அரசியல்வாதிக்கு இலங்கையில் ஓரின துணை – எலான் மஸ்கின் கருத்தால் பரபரப்பு!
அதன் அடிப்படையில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் முன்னாள் அமைச்சரால் அறிமுகப்படுத்தப்பட்ட திருத்தங்களை முன்னெடுப்பதாக இருந்தால் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட எல்லை நிர்ணய அறிக்கை அவசியமாகின்றது. ஆனால், அந்தச் செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு முழுமையாக முடிந்திருக்கவில்லை.
அத்தோடு அவ்விடயம் ஒரு நகைச்சுவையாக மாறியுள்ளது. ஆகவேதான் அந்த ஏற்பாடுகளைத் திருத்தியமைத்து பழைய முறையிலேயே தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம்.” – என்றார்.
முன்னதாக, 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல்கள் (திருத்தம்) சட்டத்தின்படி, நாட்டின் பல்வேறு பிராந்தியங்களில் சமமான பிரதிநிதித்துவத்தை வழங்கும் குறிக்கோளுடன், எல்லைகளைத் அடையாளம் காண்பதற்காக ஜனாதிபதி எல்லை நிர்ணய ஆணைக்குழுவை நியமித்திருந்தார்.
இருப்பினும், எல்லை நிர்ணயத்தின் தேவை பல ஆண்டுகளுக்கு முன்பே அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை இன்னும் நிறைவு செய்யப்படவில்லை.
2018இல் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நியமிக்கப்பட்ட மீளாய்வுக் குழு, இரண்டு மாதங்களுக்குள் புதிய எல்லைகளை இறுதி செய்யவிருந்தது. ஆனால், அதன் அறிக்கையை உரிய காலத்தில் சமர்ப்பித்திருக்கவில்லை.
இதன் விளைவாக, 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளுக்கிடையில் ஆயுட்காலம் நிறைவுக்கு வந்திருந்த மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு முடிந்திருக்கவில்லை.
2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்கச் சட்டத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட 1988ஆம் ஆண்டின் 2ஆம் எண் மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தின் பிரிவு 3ஏ(11)இல் திருத்தம் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா 2018இல் சமர்ப்பித்த எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை ஏகமனதாக நிராகரிக்கப்பட்டதோடு பைசர் முஸ்தபாவே அதற்கு எதிராக வாக்களித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது
provincial council elections mid 2025 4633

இதையும் படியுங்கள்
ஒப்பந்தங்களை மீறிய பெண் நாடு கடத்தல் – பலரை நாடு கடத்த நடவடிக்கை!
யாழில் எலிக்காய்ச்சலால் பிறிதொருவர் உயிரிழப்பு- பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!
சாலையோரத்தில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது மோதிய லொறி – மூன்று சிறுவர்கள் பலி!
செல்ஃபி மோகத்தால் பலியான தாயும், மகளும் – அனுராதபுரத்தில் சம்பவம்
நெவில் டி சில்வாவிற்கு பிணை

கிராம உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறையுடன் ஆர்ப்பாட்டம்!
