Wednesday, March 12, 2025
HomeTop Storyதேசிய பாதுகாப்பிற்கு பதிலாக நாடு பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது!

தேசிய பாதுகாப்பிற்கு பதிலாக நாடு பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது!

national security country pushed into insecurity6193

மக்களின் வருமானம் குறைந்து, வாழ்வாதாரம் வீழ்ச்சி கண்​ட போதும் அரசாங்கம் தன் பொறுப்பை நிறைவேற்றத் தவறிவிட்டது.

மக்களின் உயிரைப் பாதுகாக்கவும், மனித வளத்தைப் பாதுகாக்கவும் தவறிவிட்டது. தேசிய பாதுகாப்பு தொடர்பில் பெரிதாகப் பேசியவர்கள், தற்போதைய பலவீனமான அரசாங்கத்தின் கீழ், தேசிய பாதுகாப்பிற்கு பதிலாக, நாட்டை பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளிவிட்டுள்ளனர்.

சட்டம் கிடப்பில் போடப்பட்டு, நீதி நிலைநாட்டப்படாது, சட்டத்தின் ஆட்சி இல்லாது, நீதிமன்றமும் கொலைக்களமாக மாறியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிமித்தம் ஐக்கிய மக்கள் சக்தியின் ருவன்வெல்ல தேர்தல் தொகுதி அமைப்பாளர் நிஹால் பாரூக் அவர்களின் ஏற்பாட்டின் கீழ் ருவன்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் நேற்று (23) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

மக்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டிய அரசாங்கம் தனது பொறுப்பை சரியாகச் செய்யாமையால் கொலை கலாசாரமும், காட்டுச் சட்டமும் கோலோச்சியுள்ளன.

சஞ்சீவ கொலை – துப்பாக்கிதாரியின் வட்ஸ்அப் உரையாடல் வௌியானது!

வைத்தியசாலை மலசலகூடத்தில் குழந்தையை பெற்று யன்னலால் வீசிய மாணவி!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிங்களுக்கு பெற்றுக்கொடுத்தது எதுவுமில்லை : ஏ. சி.எஹியாகான் சாட்டையடி!

இவ்வாறான நிலையில் நாட்டு மக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க அரசால் முடியாது போயுள்ளன.

சுதந்திரமான அச்சமில்லாத சமூகத்தை உருவாக்க முடியாதுபோயுள்ளது. மக்களை கொலை செய்யும் கலாசாரம் கூட கோலோச்சியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இன்றைய செய்திகளைப் பார்க்கும்போது இந்தக் கொலைகள் சர்வ சாதாரணமாகிவிட்டன.

இவ்வாறான நிலையில் ஒரு நாட்டை ஆள முடியாத அரசாங்கத்தால், உள்ளூராட்சி மன்றங்களை ஆள முடியாது போகும்.

மக்களுக்குச் செய்ய வேண்டிய சேவைகளை இவர்களால் செய்ய முடியாது போயுள்ளன.

வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத இந்த அரசாங்கத்திற்கு எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இந்த அரசாங்கத்திற்கு தெளிவான செய்தியை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மேடைக்கு மேடை மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு துரோகம் செய்து, ஆட்சிக்கு வந்த இவர்கள் அன்று சொன்னதை நிறைவேற்றாது வேலையில்லா பட்டதாரிகளை கைவிட்டுள்ளனர்.

அரச ஊழியர்களின் சம்பளத்தை 6 மாதங்களுக்கு ஒருமுறை அதிகரிப்போம் என்று கூறிய தற்போதைய அரசாங்கம் அனைவரையும் ஏமாற்றியுள்ளது.

ஒட்டுமொத்த சமூகத்தையும் ஏமாற்றியுள்ள இந்த அரசாங்கத்திற்கு எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நல்லதொரு செய்தியை நாம் சொல்ல வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

national security country pushed into insecurity6193

இதையும் படியுங்கள்

மருமகன் பொல்லால் தாக்கியதில் மாமனார் உயிரிழப்பு!

கனேமுல்ல சஞ்சீவ கொலை – துப்பாக்கிதாரியின் படம் வௌியானது!

கடவுச்சீட்டுகளை ஒப்படைக்குமாறு இராணுவ வீரர்களுக்கு அறிவிப்பு

சினிமா பாணியில் நீதிமன்றுக்குள் நுழைந்துள்ள துப்பாக்கிதாரி – கொலையுடன் தொடர்புடைய இருவர் அடையாளம் காணப்பட்டனர்!

சஞ்சீவ கொலை, துப்பாக்கிதாரி தொடர்பில் மற்றொரு தகவல்- பிரதான சந்தேகநபர் கைது!

யாழ்ப்பாணத்தில் பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் பதற்றம்!

கணேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கிச்சூடு: கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் வீட்டில் சொகுசு கார்

கணேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கிச்சூடு: கைது செய்யப்பட்ட பொலிஸ்

யாழில் பழக்கடை சிறுவனிடம் அத்துமீறி செயற்பட்ட அதிகாரிகள்: வெளியானது காணொளி!

யாழில் பழக்கடை சிறுவனிடம் அத்துமீறி செயற்பட்ட அதிகாரிகள்: வெளியானது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular