Jaffna couple arrested airport flee to Canada 6093
கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கையை சேர்ந்த தமிழ் தம்பதியினர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளால் நேற்று இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
போலியான விசாக்களை பயன்படுத்தி ஜப்பான் வழியாக கனடா செல்ல முயற்சித்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட கணவருக்கு 40 வயது எனவும் மனைவிக்கு 34 வயது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு 8.35 மணிக்கு ஜப்பானுக்கு புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-454 இல் ஏறுவதற்காக அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக கூறப்படுகிறது.

Jaffna couple arrested airport flee to Canada 6093
இதையும் படியுங்கள்
அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆரம்பம் – மறைந்த சிரேஷ்ட ஊடகர் இராஜநாயகம் பாரதிக்கும் அஞ்சலி!
பளையில் நள்ளிரவில் பெற்றோல் குண்டு தாக்குதல்!
கடவுச்சீட்டுகளை ஒப்படைக்குமாறு இராணுவ வீரர்களுக்கு அறிவிப்பு
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு உறுதி! ஐ.எம்.எப். கூறுவது என்ன?
யாழ்ப்பாணத்தில் பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் பதற்றம்!
சாந்த அபேசேகரவும் அவரது மகனும் கைது