If you dont wear a helmet you wont get petrol 5254
இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் வீதி விபத்துகளை குறைக்க போக்குவரத்து விதிகளை கடுமையாக அமுல்படுத்த மாநில அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதில் இரு சக்கர வாகன ஓட்டுனர்கள் தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக தலைக்கவசம் அணியாத இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது என உத்தரவிடப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் போக்குவரத்து ஆணையாளர் பிரஜேஷ் நராயண் சிங் கடிதம் அனுப்பி உள்ளார்.
அதில் அவர் தெரிவிக்கையில்,
வீதி பாதுகாப்பு தொடர்பாக இந்த மாத தொடக்கத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நடத்திய ஆய்வுக்கூட்டத்தில், விபத்துகள் அதிகரித்து வருவதும், ஆண்டுக்கு 25 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதில் பெரும்பாலானவர்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் என்பதும், தலைக்கவசம் அணியாததால் இந்த உயிரிழப்புகள் இடம்பெறுவதும் கண்டறியப்பட்டது.
எனவே இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்க அரசு முடிவு செய்துள்ளது.
அதற்காக தலைக்கவசம் அணியாதவர்களுக்கு பெட்ரோல் இல்லை என்ற கொள்கையை தீவிரமாக கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கொள்கை ஏற்கனவே கவுதம் புத்த நகர் மாவட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
ஆனால் அவ்வப்போது கடைப்பிடிக்கப்பட்டு, பின்னர் கைவிடப்பட்டது. எனவே இந்த கொள்கையை அனைத்து மாவட்டங்களும் தீவிரமாக அமல்படுத்த வேண்டும். இதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
இந்த விவகாரத்தில் மோட்டார் வாகன சட்டம் 1988 இன் கீழ் பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
மேலும் பொலிஸ் மற்றும் ஆர்.டி.ஓ.க்கள் இணைந்து இந்த கொள்கை வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
இது தொடர்பாக சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள் உள்ளிட்ட தளங்கள் மூலம் விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
If you dont wear a helmet you wont get petrol 5254


இதையும் படியுங்கள்
நாடாளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவராக சாணக்கியன் தெரிவு.
VAT, SST வரிகளை நீக்கி மாணிக்கக் கல், ஆபரணத் துறையை அபிவிருத்தி செய்ய வேண்டும்!
பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை
வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?

தை பிறந்தால் வழி பிறக்கும் – இன்று தைப்பொங்கல்!
நன்றி செலுத்துதல் என்ற பாடத்தை கற்பிக்கும் தைப்பொங்கல்
