gajendrakumar tries to incite communalism 4320
சமஷ்டி தீர்வைக்கோரி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இனவாதத்தை தூண்ட முற்படுகின்றார். அவர் இவ்வாறு செயற்பட்டால் நாம் சும்மா இருக்கமாட்டோம். பிறகு கஜேந்திரகுமாருக்கு எங்கு செல்ல வேண்டிவரும் என தெரியாது…”
என்று ஜனசத்த பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்லே சீலரத்தன தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தற்போது இனவாதத்தை பரப்பிவருகின்றார். அவர் கொழும்பில்தான் வாழ்கின்றார். கொழும்பு மக்கள் அவருக்கு துளியளவும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. நிலைமை இவ்வாறு இருக்கையில் வடக்குக்கு சென்று மக்கள் ஏன் தவறாக வழிநடத்த வேண்டும்?
அதுமட்;டுமல்ல இந்திய பிரதமருக்கு கடிதமொன்றையும் அவர் அனுப்பியுள்ளார். சமஷ்டி முறைமைக்கு அழுத்தம் கொடுக்குமாறு அக்கடிதம் ஊடாக கஜேந்திரகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
கஜேந்திரகுமாரின் தேவைக்கேற்ப 13 ஐ அமுல்படுத்தவோ, அதிகாரத்தை பகிரவோ ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கக்கூடாது.
சர்வதேச மனக் கணிதப் போட்டியில் திஹாரிய UCMAS மாணவர்கள் சாதனை!
வடக்கில் மக்களைப் பழிவாங்கும் அரச அலுவலர்கள்! – ஆளுநர் கவலை
யாழில் சொகுசு பஸ் உழவு இயந்திரம் மோதி விபத்து – ஐவர் காயம் மிருசுவில் பகுதியில் சம்பவம்!
கஜேந்திரகுமார் இனவாதத்தை தூண்டினால் நாம் சும்மா இருக்கமாட்டோம். பிறகு அவருக்கு எங்கு செல்ல வேண்டிவருமோ தெரியவில்லை. இனவாதத்துக்கு இடமளிக்ககூடாது. இனவாதத்தை தூண்டினால் நாடு முன்னேறாது.
டயஸ்போராக்களின் கோரிக்கைக்கேற்பவே கஜேந்திரகுமார் சமஷ்டி கோருகின்றார். டயஸ்போராக்களிடம் பணம் வாங்கினால் பரவாயில்லை, ஆனால் இனவாதத்தை தூண்ட இடமளிக்கமாட்டோம். வடக்கில் உள்ள விகாரைகளை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும்.” என்றார் சீலரத்தன தேரர்.
gajendrakumar tries to incite communalism 4320

இதையும் படியுங்கள்
ஒப்பந்தங்களை மீறிய பெண் நாடு கடத்தல் – பலரை நாடு கடத்த நடவடிக்கை!
யாழில் எலிக்காய்ச்சலால் பிறிதொருவர் உயிரிழப்பு- பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!
விஜித்த ஹேரத்தின் அமைச்சு செயலாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு!
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய முடிவு?
கொழும்பு – கண்டி வீதியில் மற்றுமொரு விபத்து

அரிசி திருடிய இருவர் கைது
