Friday, March 14, 2025
HomeLocal Newsகிளிநொச்சியில் நேற்றிரவு கோர விபத்து- குழந்தை பலி: மூவர் படுகாயம்!

கிளிநொச்சியில் நேற்றிரவு கோர விபத்து- குழந்தை பலி: மூவர் படுகாயம்!

child died tragic accident Kilinochchi night 4477

கிளிநொச்சியில் நேற்றிரவு இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த குழந்தை தொடர்ந்தும் யாழ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் 2 வயது குழந்தை பலியானதுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

மோட்டார் சைக்கிளுடன் ரிப்பர் வாகனமொன்று மோதியதில் விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

A9 வீதியால் பயணித்த ரிப்பர் வாகனம் மோட்டார் சைக்கிளை மோதி விபத்தினை ஏற்படுத்தியதுடன், விபத்து இடம்பெற்ற பகுதியிலிருந்து சுமார் 100m பாதையை விட்டு விலகி பயணித்துள்ளது.

குறித்த ரிப்பர் வாகனத்தை செலுத்திய சாரதி மதுபோதையில் இருந்ததாக சம்பவ இடத்தில் நின்ற மக்கள் குறிப்பிடுகின்றனர்.

விபத்தை ஏற்படுத்திய சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த 2 வயது குழந்தை பலியானதுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் 6 வயதுடைய குழந்தையும் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் படுகாயமடைந்த குழந்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

நரகமாக மாறிவரும் நன்பேரியல் சுற்றுலா தளம் – பயணிகள் குற்றச்சாட்டு!

முட்டை உற்பத்திகள் விலை குறையாததால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி!

புத்திசாலிகள் ஏன் எப்போதும் அமைதியாக இருக்கிறார்கள்?

இதையும் படியுங்கள்

ஒப்பந்தங்களை மீறிய பெண் நாடு கடத்தல் – பலரை நாடு கடத்த நடவடிக்கை!

யாழில் எலிக்காய்ச்சலால் பிறிதொருவர் உயிரிழப்பு- பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

சாலையோரத்தில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது மோதிய லொறி – மூன்று சிறுவர்கள் பலி!

செல்ஃபி மோகத்தால் பலியான தாயும், மகளும் – அனுராதபுரத்தில் சம்பவம்!

வீதி விபத்துக்களை தவிர்க்குமாறு கோரிக்கை

வீதி விபத்துக்களை தவிர்க்குமாறு கோரிக்கை

தம்பதியினர் மீது துப்பாக்கி பிரயோகம்

தம்பதியினர் மீது துப்பாக்கி பிரயோகம்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular