chanakyan elected cochairman parliamentary union 5094
திறந்த நாடாளுமன்ற முன்னெடுப்புக்கான நாடாளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்களாக (பேராசிரியர்) கிரிஷாந்த அபேசேன மற்றும் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோர் தெரிவு.
🔸 ஒன்றியத்தின் அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண தெரிவு.
🔸 பிரதி இணைத் தலைவர்கள் நால்வர்.
பத்தாவது நாடாளுமன்றத்தில் மீண்டும் ஸ்தாபிக்கப்பட்ட திறந்த நாடாளுமன்ற முன்னெடுப்புக்கான நாடாளுமன்ற ஒன்றியத்தின் முதலாவது கூட்டம் நேற்று முன்தினம் (08) நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இந்த ஒன்றியத்தின் இணைத் தலைவர்களாக அமைச்சர் (பேராசிரியர்) கிரிஷாந்த அபேசேன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
இதன்போது ஒன்றியத்தின் இணைத் தலைவராக அமைச்சர் (பேராசிரியர்) கிரிஷாந்த அபேசேனவின் பெயரை, நாடாளுமன்ற உறுப்பினர் (வைத்திய கலாநிதி) ஜனக சேனாரத்ன முன்மொழிந்ததுடன், நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பாக்ய ஸ்ரீ ஹேரத் அதனை வழிமொழிந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் அவர்களின் பெயரை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிந்ததுடன், அதனை நாடாளுமன்ற உறுப்பினர் நலீன் பண்டார வழிமொழிந்தார்.
கறி பனிஸ் உள்ளே லைட்டர் பாகங்கள்!
வில்பத்து கடற்பரப்பில் இறந்த டொல்பின்கள் – விசாரணை தீவிரம்!
பாராளுமன்ற அமர்வு ஆரம்பம் – நேரலை
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று பாராளுமன்றுக்கு
அத்துடன், இந்த ஒன்றியத்தின் அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண தெரிவு செய்யப்பட்டதுடன், பிரதி இணைத் தலைவர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) சமிந்திரானி கிரிஎல்லே, சந்தன சூரியஆரச்சி, எஸ். எம். மரிக்கார் மற்றும் (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
இங்கு உரையாற்றிய ஒன்றியத்தின் இணைத் தலைவர்கள், நாடாளுமன்றத்தை பொதுமக்களுக்கு நெருக்கமடையச் செய்வதற்கு இந்த ஒன்றியத்தின் மூலம் மேற்கொள்ளக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக தெரிவித்தனர். அதற்காக அனைவரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
chanakyan elected cochairman parliamentary union 5094
இதையும் படியுங்கள்
பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!
லடாக் பகுதியில் சீனாவின் புதிய மாவட்டங்கள்!
வெலிகமயில் பயங்கரம் 5 பேரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு!
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை