Sunday, March 9, 2025
HomeLocal Newsமட்டக்களப்பு கொம்மாதுறையில் யானைத்தாக்குதல் - ஆசிரியரின் வீடு பாரியளவில் சேதம்!

மட்டக்களப்பு கொம்மாதுறையில் யானைத்தாக்குதல் – ஆசிரியரின் வீடு பாரியளவில் சேதம்!

elephant attack in kommadurai batticaloa 6263

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பற்றுப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொம்மாதுறை மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள மட் / செங்கலடி மத்தியகல்லூரி ஆசிரியரான அருளானந்தம் சூரியகாந்தன் என்பவரது வீடு யானைத்தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

இன்று அதிகாலை 3.30மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டின் உரிமையாளரின் தாயார் சின்னத்தம்பி செல்வம் சம்பவம் இடம்பெற்ற போது வீட்டில் இருந்திருக்கவில்லை.

இருந்தபோதிலும் வீட்டின் உடமைகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

வீடு கிட்டத்தட்ட பாரியளவில் சேதமானதுடன், வீட்டில் இருந்த ஆறு மூடை நெல், ஒரு மூடை அரிசி, வீட்டுத்தளபாடங்கள் உட்பட நீர் இறைக்கும் இயந்திரம், விவசாய உபகரணங்கள் அனைத்தும் சேதமாக்கப்பட்டுள்ளன.

குறித்த பிரதேசங்களில் யானைகளின் தாக்கம் என்பது அடிக்கடி இடம்பெற்று வருகின்றது.

இதனால் பலதரப்பட்ட மக்களும் பாரிய பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.

இதற்கான தீர்வுதான் என்ன?

அரசாங்கமும் உரிய அதிகாரிகளும் யானைத்தாக்கத்தால் அவதியுறும் மக்களுக்கான தீர்வை எவ்வகையில் பெற்றுக்கொடுக்கப் போகின்றனர்.

யானைத்தக்கத்தால் இலங்கையில் பல பகுதிகளில் உள்ள மக்களின் உயிர் உடமைகள் பாரியளவில் சேதத்திற்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சஞ்சீவ கொலை – துப்பாக்கிதாரியின் வட்ஸ்அப் உரையாடல் வௌியானது!

தேசிய பாதுகாப்பிற்கு பதிலாக நாடு பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது!

ஜீவன் தொண்டமான் காட்டிக் கொடுத்ததாக கூறியவர்கள் இன்று வாயடைத்து நிற்கிறார்கள்!

elephant attack in kommadurai batticaloa 6263

இதையும் படியுங்கள்

மருமகன் பொல்லால் தாக்கியதில் மாமனார் உயிரிழப்பு!

கனேமுல்ல சஞ்சீவ கொலை – துப்பாக்கிதாரியின் படம் வௌியானது!

கடவுச்சீட்டுகளை ஒப்படைக்குமாறு இராணுவ வீரர்களுக்கு அறிவிப்பு

சினிமா பாணியில் நீதிமன்றுக்குள் நுழைந்துள்ள துப்பாக்கிதாரி – கொலையுடன் தொடர்புடைய இருவர் அடையாளம் காணப்பட்டனர்!

சஞ்சீவ கொலை, துப்பாக்கிதாரி தொடர்பில் மற்றொரு தகவல்- பிரதான சந்தேகநபர் கைது!

யாழ்ப்பாணத்தில் பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் பதற்றம்!

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular