reason for arrest of General Secretary of Vijay 4663
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், பொலிஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி தளபதி விஜய் கைப்பட எழுதிய கடிதத்தை, தனியார் மகளிர் கல்லூரி அருகே பொதுமக்களுக்கு த.வெ.க கட்சியின் தொண்டர்கள் விநியோகம் செய்து வந்த நிலையில், பொலிஸார் இது போன்ற பிரசுரங்களை விநியோகிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டபின்னரும், த.வெ.க கட்சியினர் பொலிஸாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து த.வெ.க கட்சியின் தொண்டர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
எரிபொருள் விலைகளில் இன்று திருத்தம்?
நடிகை சித்ராவின் தந்தை அதிகாலையில் தற்கொலை – காரணம் என்ன?
இலங்கையின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வு குறைந்த செலவில்!
த.வெ.க கட்சியினர் கைது செய்யப்பட்ட விவரம் அறிந்து, அவர்களை பார்க்க விரைந்து வந்த, த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை தியாகராய நகரில் வைத்து பொலிஸார் அவரை கைது செய்துள்ள நிலையில், இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான விவகாரம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அரசியல் கட்சியினர் தொடர்ந்து இதற்க்கு தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.
தளபதி விஜய்யும் இந்த விவகாரம் தொடர்பாக நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு கொடுத்தார்.

அப்போது அவர் கொடுத்த, மனுவில் … தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை ஒன்றிய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து தவெக பொதுச்செயலாளர் கைது செய்யப்பட்டதால், பொலிஸார் கைது செய்து வைத்திருந்த 5-திற்கும் மேற்பட்ட தொண்டர்களை விடுதலை செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தமிழக அரசியலிலும், தளபதி விஜய் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

reason for arrest of General Secretary of Vijay 4663
இதையும் படியுங்கள்
ஒப்பந்தங்களை மீறிய பெண் நாடு கடத்தல் – பலரை நாடு கடத்த நடவடிக்கை!
யாழில் எலிக்காய்ச்சலால் பிறிதொருவர் உயிரிழப்பு- பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!
சாலையோரத்தில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது மோதிய லொறி – மூன்று சிறுவர்கள் பலி!
செல்ஃபி மோகத்தால் பலியான தாயும், மகளும் – அனுராதபுரத்தில் சம்பவம்
கெப் வண்டி விபத்தில் 5 பேருக்கு காயம்

ரிஷாட்டின் முயற்சியில் 7 கோடி ரூபா செலவில் பாடசாலைக் கட்டிடம்!
