new rules in 2025 celebration in galle face 4652
நாளை மலரவுள்ள 2025 புத்தாண்டு தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு இன்றைய தினம் (31) காலிமுகத்திடல் பிரதேசத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு பொலிசார் தடை விதித்துள்ளனர்.
2025ஆம் ஆண்டை வரவேற்பதற்காக பெருந்தொகையான மக்கள் இன்று (31) காலி முகத்திடல் வளாகத்தில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதனை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
தலைநகரில் எதிர்பார்க்கப்படும் கடுமையான வாகன நெரிசலைக் குறைக்கும் வகையில், புறக்கோட்டை, கொம்பனித் தெரு, மருதானை, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, கறுவாத் தோட்டம் போன்ற பொலிஸ் பிரிவுகளில் இந்த விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அத்துடன் இன்றைய தினம் காலி முகத்திடலில் வாகன நிறுத்துமிடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு அனுமதிக்கப்படாது என்றும், வாகனங்கள் நிறுத்துவதற்காக வேறு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
new rules in 2025 celebration in galle face 4652
இதையும் படியுங்கள்
ஒப்பந்தங்களை மீறிய பெண் நாடு கடத்தல் – பலரை நாடு கடத்த நடவடிக்கை!
யாழில் எலிக்காய்ச்சலால் பிறிதொருவர் உயிரிழப்பு- பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!
சாலையோரத்தில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது மோதிய லொறி – மூன்று சிறுவர்கள் பலி!
செல்ஃபி மோகத்தால் பலியான தாயும், மகளும் – அனுராதபுரத்தில் சம்பவம்
கெப் வண்டி விபத்தில் 5 பேருக்கு காயம்

ரிஷாட்டின் முயற்சியில் 7 கோடி ரூபா செலவில் பாடசாலைக் கட்டிடம்!
