Friday, March 14, 2025
HomeTop Storyமதுபோதையில் வாகனம் செலுத்தல் - பொலிஸாரின் தீர்மானம்!

மதுபோதையில் வாகனம் செலுத்தல் – பொலிஸாரின் தீர்மானம்!

drunk driving police decision 4487

இனிமேல் மதுபானம் அருந்திவிட்டு வாகனம் செலுத்தும் அனைத்து சந்திர்ப்பங்களிலும் கைது செய்யப்படும் சாரதிகளின் அனுமதிப் பத்திரங்களை 12 மாதங்களுக்கு இடைநிறுத்தி அல்லது இரத்து ​செய்யுமாறு நீதிமன்றில் பொலிஸாரால் கோரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மதுபோதையில் வாகனம் செலுத்த வேண்டாம் என அனைத்து சாரதிகளையும் இலங்கை பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் அமுல்படுத்தப்பட்ட விசேட போக்குவரத்து நடவடிக்கை தொடர்பில் ஊடகங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே பொலிஸார் இதனைத் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் நேற்றிரவு கோர விபத்து- குழந்தை பலி: மூவர் படுகாயம்!

20 வருடங்களை கடந்தும் தொடரும் ஆழிப்பேரலை வடுக்கள்!

நரகமாக மாறிவரும் நன்பேரியல் சுற்றுலா தளம் – பயணிகள் குற்றச்சாட்டு!

அதன்படி, இன்று (26) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 395 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த 24 மணி நேரத்தில், கவனக்குறைவாகவும், அபாயகரமாகவும் வாகனம் செலுத்திய 50 சாரதிகளும், அதிவேகமாக வாகனம் ஓட்டிய 120 சாரதிகளும், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 1,262 சாரதிகளும், அனுமதிப்பத்திர தவறுகள் தொடர்பில் 682 சாரதிகளும்,வேறு வகையான போக்குவரத்து தவறுகள் தொடர்பில் 5,441 சாரதிகளும் உள்ளடங்களாக 7,950 பேருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலங்களில் வாகன விபத்துக்களை குறைக்கும் நோக்கில், பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய, நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து நடவடிக்கை கடந்த 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இந்த விசேட நடவடிக்கையை பொலிஸாரால் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.

drunk driving police decision 4487

இதையும் படியுங்கள்

ஒப்பந்தங்களை மீறிய பெண் நாடு கடத்தல் – பலரை நாடு கடத்த நடவடிக்கை!

யாழில் எலிக்காய்ச்சலால் பிறிதொருவர் உயிரிழப்பு- பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

சாலையோரத்தில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது மோதிய லொறி – மூன்று சிறுவர்கள் பலி!

செல்ஃபி மோகத்தால் பலியான தாயும், மகளும் – அனுராதபுரத்தில் சம்பவம்!

சென்னை மாணவி பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட நபரின் அடையாளத்தை வெளியிட்டால் என்ன தண்டனை?

சென்னை மாணவி பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட நபரின் அடையாளத்தை வெளியிட்டால் என்ன தண்டனை?

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவி – எஃப்.ஐ.ஆரை முடக்கிய காவல்துறை

அண்ணா பல்கலைக்கழகம், பாலியல் வன்கொடுமை
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular