Special security in view of the festive season 4301
எதிர்வரும் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை பொலிஸார் தயாரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மேல் மாகாணத்தில் மாத்திரம் 6,500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இதற்காக கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சர்வதேச மனக் கணிதப் போட்டியில் திஹாரிய UCMAS மாணவர்கள் சாதனை!
வடக்கில் மக்களைப் பழிவாங்கும் அரச அலுவலர்கள்! – ஆளுநர் கவலை
யாழில் சொகுசு பஸ் உழவு இயந்திரம் மோதி விபத்து – ஐவர் காயம் மிருசுவில் பகுதியில் சம்பவம்!
மக்கள் அதிகம் கூடும் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கடைகளில் திருடர்கள் மற்றும் குற்றவாளிகளை அடையாளம் காண 500க்கும் மேற்பட்ட சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் கத்தோலிக்க தேவாலயங்கள் உள்ளிட்ட மத ஸ்தலங்களின் பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில் விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
உங்களைச் சுற்றியுள்ள அந்நியர்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான நபர்களைப் பற்றி அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது பொலிஸ் அதிகாரிகளுக்கோ தெரிவிக்கவும் எனவும் உங்கள் சொத்து மற்றும் பணத்தைப் பற்றி எப்போதும் கவனமாக இருங்கள் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Special security in view of the festive season 4301
இதையும் படியுங்கள்
ஒப்பந்தங்களை மீறிய பெண் நாடு கடத்தல் – பலரை நாடு கடத்த நடவடிக்கை!
யாழில் எலிக்காய்ச்சலால் பிறிதொருவர் உயிரிழப்பு- பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!
விஜித்த ஹேரத்தின் அமைச்சு செயலாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு!
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய முடிவு?
இந்திய எண்ணெய் குழாய்கள் இலங்கைக்கு வருகிறதா?

யாழ். வைத்தியசாலையில் காவலாளியை கடித்து காயப்படுத்திய நபர்
