13th Amendment TamilNadu parties pressure Modi 4480
13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு தமிழக கட்சிகள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுக்க வேண்டும் என வடக்கு,கிழக்கு மாகாணங்களின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்திய பயணத்தில் 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் பிரதமர் நரேந்திர மோடி எவ்வித கருத்துகளை முன்வைத்திருக்கவில்லை.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வரதராஜ பெருமாள்,
”முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 2015ஆம் ஆண்டு இந்தியாவுக்குச் சென்றிருந்த போதும், 2023ஆம் ஆண்டு சென்றிருந்த போதும் 13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துமாறு பிரதமர் மோடி அழுத்தம் கொடுத்திருந்தார்.
ஆனால், இம்முறை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடனான சந்திப்பில் 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் பேசப்பட்டமை தொடர்பான செய்திகள் எதுவும் இல்லை. இது கவலையளிக்கிறது.
இலங்கையில் உள்ள தமிழ் கட்சிகளும், தமிழகத்தில் உள்ள கட்சிகளும் பிரதமர் மோடியிடம் 13ஐ அமுல்படுத்தும் அழுத்தத்தை இலங்கைக்கு கொடுக்க வேண்டும் என கோர வேண்டும்.
1987ஆம் ஆண்டு இந்தியாவின் தலையீட்டின் கீழ்தான் 13ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது.
எனவே, அதனை முழுமையாக அமுல்படுத்துவதற்கான அழுத்தத்தை இந்தியா கொடுக்க வேண்டும்.” என தி இந்து பத்திரிக்கைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
13th Amendment TamilNadu parties pressure Modi 4480
இதையும் படியுங்கள்
ஒப்பந்தங்களை மீறிய பெண் நாடு கடத்தல் – பலரை நாடு கடத்த நடவடிக்கை!
யாழில் எலிக்காய்ச்சலால் பிறிதொருவர் உயிரிழப்பு- பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!
சாலையோரத்தில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது மோதிய லொறி – மூன்று சிறுவர்கள் பலி!
செல்ஃபி மோகத்தால் பலியான தாயும், மகளும் – அனுராதபுரத்தில் சம்பவம்!
வீதி விபத்துக்களை தவிர்க்குமாறு கோரிக்கை

தம்பதியினர் மீது துப்பாக்கி பிரயோகம்
