Monday, February 10, 2025
HomeForeign Newsபிரித்தானியாவில் சிறப்பாக இடம் பெற்ற தமிழர் விளையாட்டு விழா

பிரித்தானியாவில் சிறப்பாக இடம் பெற்ற தமிழர் விளையாட்டு விழா

பிரித்தானியாவில் நோர்தம்ரன் பகுதியில் நோர்தம்ரன் தமிழ் விளையாட்டு கழகம் மற்றும் தமிழ் கல்விக்கூடம் இணைந்து நடத்திய விளையாட்டு விழா கடந்த 29 அன்று caroline chisolm பாடசாலையில் காலை 9 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.

இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக நோர்தம்டன் மேஜர் கலந்து சிறப்பித்தித்துடன் ஐக்கிய இராச்சிய தேசிய கொடியையும் ஏற்றி வைத்தார்.

பதக்கங்கள் மற்றும் பணப் பரிசுகள்

நிகழ்வில் சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள், கரப்பந்தாட்டம் மற்றும் பெரியவர்களுக்கான கிராமிய விளையாட்டுகளும் நடை பெற்றதோடு சுவையான தாயக உணவுகளும் வழங்கப்பட்டன.

அத்துடன் விளையாட்டில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பணப் பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் சிறுவர்கள், பெரியவர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன், குறித்த விளையாட்டு போட்டி முதல் தடவையாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular