Monday, February 10, 2025
HomeLocal Newsமட்டக்களப்பில் தாக்கப்பட்ட ஜே.வி.பி.சிங்கள இளைஞர்கள்!

மட்டக்களப்பில் தாக்கப்பட்ட ஜே.வி.பி.சிங்கள இளைஞர்கள்!

JVP Sinhala youths attacked in Batticaloa

தேசிய மக்கள் சக்திக்காக (NPP) மட்டக்களப்பில் தேர்தல் பிரச்சாரப்பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தென் இலங்கையைச் சேர்ந்த இளைஞர்களை, (TMVP) என்ற பிள்ளையான் குழு உறுப்பினர் தாக்கிய காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

முறக்கெட்டான்ஞ்சேனை பகுதியில் அமைக்கப்பட இருந்த தேசிய மக்கள் சக்தியின் (NPP) அலுவலகத்திற்கு சென்ற (TMVP) உறுப்பினர்கள், சிங்கள இஞைர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்திருந்ததும் தெரிய வருகின்றது.

TMVP என்கின்ற அமைப்பு ஏற்கனவே பல கொலைகள், ஆட்கடத்தல்கள், வல்லுறவு என்று பலவிதமான குற்றச்சாட்டுக்கசளுக்கு உள்ளான ஒரு தரப்பு என்பதுடன், அரசியல் செய்யும் இந்த ஆயுத அமைப்பின் தலைவர் பிள்ளையான் எனப்படுகின்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையில் சம்பந்தப்பட்டதாக சிறையிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் மற்றும் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக பிள்ளையான் அநுரகுமார ஆட்சியால் விரைவில் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டுவருகின்ற நிலையில், அவரது கட்சி உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடாத்தி, அவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தென்னிலங்கை சிங்கள இளைஞர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த பிள்ளையான குழு உறுப்பினர் ஒரு சிறைச்சாலை அதிகாரி என்றும் கூறப்படுகின்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular