Friday, August 29, 2025
HomeIndian Newsபோலி ‘likes’ காட்டி தமிழக மக்களை ஏமாற்றிய விஜய் - Reveal ​​செய்த Youtuber!

போலி ‘likes’ காட்டி தமிழக மக்களை ஏமாற்றிய விஜய் – Reveal ​​செய்த Youtuber!

youtuber vijey instagram vedio fake likes 6917

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், அண்மையில் மதுரையில் நடத்திய மாநாட்டில் பிடிக்கப்பட்ட செல்பி காணொளி ஒன்றை பகிர்ந்திருந்தார்.

இந்த காணொளி ஒரு கோடிக்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்றிருந்ததாக பரப்பப்பட்ட செய்தி போலியானது என தமிழகத்தின் பிரபல யூடியுபர் மாரிதாஸ் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் மக்களை ஏமாற்றும் பல உத்திகளை கடைப்பிடித்து வருவதாக கூறியுள்ள மாரிதாஸ், அப்பட்டமாக மக்களை ஏமாற்று பணியில் விஜய் இறங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

குறித்த காணொளி பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஆகியோர் பகிரும் இன்ஸ்டாகிராம் காணொளிக்கு நிகராக மக்களை சென்றடைந்துள்ளதாக தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் மத்தியில் போலி செய்திகளை பகிர்ந்துள்ளதாக மாரிதாஸ் கூறியுள்ளார்.

குறித்த காணொளியை இன்ஸ்டாகிராமில் ஒரு கோடி பேர் வரை லைக் செய்துள்ளனர்.

ஆனால், அவர்களில் 1 சதவீதமானவர்கள் மாத்திரமே தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் ஏனையவர்கள் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் என்று அவர் புலனாய்வு செய்து வெளிப்படுத்தியுள்ளார்.

நடிகர் விஜய் யாரென தெரியாதவர்கள் எவ்வாறு அவரது காணொளிக்கு லைக் செய்ய முடியும் என கேள்வியெழுப்பியுள்ள அவர், விஜய் தமிழகத்திலா வடமாநிலங்களிலா கட்சி நடத்துகிறார் என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

லைக்களை பெற்றுக்கொடுக்கும் இணைய நிறுவனங்களுக்கு பணம் செலுத்தி இவ்வாறு லைக்களை நடிகர் விஜய் பெற்றுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள மாரிதாஸ், இது முற்றிலும் தமிழக மக்களை ஏமாற்றும் செயல்பாடு எனக் கூறியுள்ளார்.

youtuber vijey instagram vedio fake likes 6917

More News From Mahayugam >>>

கச்சதீவு விவகாரம் -தமிழக மீனவர்களை விஜய் ஏமாற்றுகிறார்

செம்மணி மனிதப் புதைகுழி – 177 எலும்புக்கூடுகள் அடையாளம்!

இலங்கை வரலாற்றில் பதிவான சவால் மிக்க பொலிஸ் நடவடிக்கை – விசேட நீதிமன்றம் தயார்!

இந்திய நாடாளுமன்ற செயல்பாடுளை அறிந்துக்கொள்ள இலங்கை எம்.பிகள் பயணம்!

2027 சர்வதேச கிண்ண தொடர் – கிரிக்கெட் சபையின் புதிய அறிவிப்பு

இலங்கை வரலாற்றில் பதிவான சவால் மிக்க பொலிஸ் நடவடிக்கை – விசேட நீதிமன்றம் தயார்!

இந்திய நாடாளுமன்ற செயல்பாடுளை அறிந்துக்கொள்ள இலங்கை எம்.பிகள் பயணம்!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular