Workshop Online Privacy Protection Journalists 6485
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் இலங்கைக்கான நெதர்லாந்து தூதரகம் இணைந்து ஒழுங்கு செய்த மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு நிகழ்நிலைக் காப்புச்சட்டம் தொடர்பிலான பயிற்சிப்பட்டறை அண்மையில் மட்டக்களப்பு ரிவேரா தனியார் விருந்தகத்தில் நடைபெற்றது.
இப் பயிற்சிப்பட்டறையில் நிகழ்நிலைக் காப்புச்சட்டம் தொடர்பிலும் அதனுடைய வரைபுகள், நடைமுறைகள், தண்டனைகள் போன்றவைகள் தொடர்பில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் சட்ட ஆலோசகர் அஷ்வினி நடேசன் மற்றும் போலி செய்திகளை இனங்காணல் தொடர்பில் வளவாளர் யசிகரன் ஆகியோர் கலந்து கொண்டு விரிவுரை நிகழ்த்தினார்கள்.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பெல்லா டலிமா தலைமையில் நடைபெற்ற இவ் செயலமர்வில் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Workshop Online Privacy Protection Journalists 6485


மேலும் வாசிக்க :
விடுதலை விருட்சத்திற்கு நீர் சேகரிக்கும் பணி 8 மாவட்டங்களில் ஆரம்பம்!
குருநாகலில் வயலில் கண்டெடுக்கப்பட்ட சிசுவுக்கு ஜெர்மனியில் வாழ்வு : தாதியர்களுக்கு பாராட்டு (Video)!
குருக்கள் மடம் மனிதப் புதைகுழி வழக்கு: களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!
