Friday, February 7, 2025
HomeLocal Newsமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு என்ன நடந்தது? மக்கள் ஆணைக்கு துரோகமிழைக்காதீர்கள்!

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு என்ன நடந்தது? மக்கள் ஆணைக்கு துரோகமிழைக்காதீர்கள்!

what happened promises made people 4971

தற்போதைய அரசாங்கம் நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியுள்ளதாக அரசாங்கத்துடன் தொடர்புடைய அமைச்சர்கள் பாராளுமன்றத்தில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டாலும், நாட்டில் மனிதாபிமான ரீதியாக ஸ்திரத்தன்மை ஏற்படவில்லை என்பதை புது வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வில் கலந்து இன்று (07) கொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டினார்.

ஸ்திரமான நாடு உருவாகி வருகின்றது என்ற பாராளுமன்றத்தில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வரும் வேளையில், மக்கள் பெரும் ஆணையை பெற்றுத் தந்தது ஏலவே காணப்பட்ட சர்வதேச நாணய நிதிய இணக்கப்பாட்டை அவ்வாறே நடைமுறைப்படுத்துவதற்காகவா என கேள்வி எழுப்புகிறேன். புதிய கடன் மறுசீரமைப்பு பகுப்பாய்வொன்றை மேற்கொண்டு புதிய IMF இணக்கப்பாட்டை எட்டுவோம் என்ற அறிவிப்பை கிடப்பில் போட்டு, மக்கள் வழங்கிய ஆணையை காலில் போட்டு மிதித்து தூள் தூளாக்கி விட்டாத எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

🟩 அதிகரித்ததாக கூறப்பட்ட உர மானியம் உரியவர்களுக்கு இன்னும் முறையாக கிடைத்தபாடில்லை.

பெரும் மக்கள் சார் அரசாங்கம் எனக் கூறிக்கொண்டு, மக்கள் சார் செயற்பாடுகளை முன்னெடுத்தாலும் அதிகரித்ததாக கூறப்பட்ட உர மானியம் இன்னும் உரியவர்களுக்கு கிடைக்கவில்லை. நமது நாட்டில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இன்னும் இந்த மானியத்தைப் பெறவில்லை. விவசாய நடவடிக்கைகள் ஏறக்குறைய நிறைவடைந்து வரும் வேளையிலும் கூட, இந்த உர மானியங்கள் இன்னும் உரியவர்களுக்கு போய்ச்சேரவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 9000 ரூபா மின் கட்டணம் எப்போது 6000 ரூபாவாக மாறும்?

ஸ்திரமான நாடு உருவாகி விட்டது என்றால் 9000 ரூபா மின் கட்டணம் 6000 ரூபாவாகவும், 3000 ரூபா மின் கட்டணம் 2000 ரூபாவாகவும் மாறுவது எப்போது? உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு விடயத்தில் முன்னாள் அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை மாற்றியமைத்து, உழைக்கும் மக்களின் ஊழியர் சேமலாப நிதியில் இருந்து பெறப்பட்ட தொகையை உரிய மக்களுக்கு நிவாரணமாக வழங்கும் திகதியை தெரிவியுங்கள். சர்வதேச பிணைமுறி பத்திரதாரர்களுக்கு நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் போது குறையும் கடன் தொகைச் சலுகை கிடைக்கிறது. ஆனால் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பில் உழைக்கும் மக்களுக்கு குறித்த நிவாரணச் சலுகை கிடைக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

🟩 பராட்டே சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ள போதிலும், பிரச்சினைக்கு இன்னும் உரிய தீர்வு காணப்படவில்லை.

நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினரின் நலன் கருதி பராட்டே சட்டத்தின் அமுலாக்க காலம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ள போதிலும், தொழிற்துறை ரீதியாக அவர்கள் மீண்டும் எழும்புவதற்கான பக்க பலம் வழங்கப்படவில்லை. மூலதனத்திற்கான அணுகல் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையிலான ஒழுங்கமைப்பில் வழங்கப்பட வேண்டும். ஆனால் தற்போதைய அரசாங்கத்தால் அது எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. இன்றும் கூட கடவுச்சீட்டுத் தட்டுப்பாட்டுக்கு உரிய தீர்வை வழங்க முடியாதுபோயுள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

குட்டிக் குழந்தை அஹானாவின் சுட்டித்தனங்கள்!

குறைந்த விலையில் மதுபானத்தை உற்பத்தி செய்ய அரசாங்கம் யோசனை!

28 கோடி ரூபாவுக்கு அதிக பெறுமதியுடைய தங்கத்துடன் மூவர் கைது!

🟩 சுவசெரிய வேலைத்திட்டத்திற்கு தற்போதைய அரசாங்கமும் தடையாக உள்ளது.

இலங்கையில் மிகவும் வெற்றிகரமான வேலைத்திட்டமாக இருந்து வரும் 1990 சுவசெரிய திட்டம், கோவிட் காலத்திலும், நாடு வங்குரோத்தடைந்திருந்த காலத்திலும் தொடர்ச்சியான சேவையை முன்னெடுத்து வந்தது. இன்றைய நிலையில் அதன் பணிப்பாளர்கள் சபை கலைக்கப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டத்திற்கு உயிரோட்டம் கொடுத்து ஆற்றலை வழங்கியவர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 அரசாங்கத்தின் 159 பாராளுமன்ற உறுப்பினர்களும் வீதிகளுக்கு இறங்கி, மக்கள் பட்டுவரும் இன்னல்களை பாருங்கள்.

முடிந்தால் அரசின் 159 பேரும் வீதிகளுக்கு இறங்கி மக்கள் பட்டுவரும் இன்னல்களை, மக்களின் குரலுக்கு செவிசாய்ங்கள். மீனவ சமூகம், முச்சக்கரவண்டி சாரதிகள், சுயதொழில் செய்பவர்கள் எரிபொருள் மானியத்தை எதிர்பார்த்திருக்கின்றனர். ஆனால் இதுவரை எதுவுமே நடந்தபாடில்லை. இவை இவ்வாறு இருக்க பாராளுமன்றத்தில் ஸ்திரத்தன்மையைப் பற்றி பேசுவது எங்ஙகனம்? தற்போது ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து, தொழில்துறைகள் மூடுண்டு, வறுமை அதிகரித்து, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து காணப்படும் போது, நீங்கள் கூறும் ஸ்திரத்தன்மையால் நாட்டுக்கு எந்த பலனும் ஏற்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

🟩 ரோஹிங்கிய அகதிகளை நாட்டை விட்டு அனுப்ப வேண்டாம்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மியன்மார் ரோஹிங்கிய அகதிகள் குழுவொன்று முல்லைத்தீவை வந்தடைந்தனர். இவர்களை நாட்டிலிருந்து வெளியேற்ற அரசாங்கம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இம்மக்களை திருப்பி அனுப்புவது மனிதாபிமான சட்டங்களை மீறும் செயலாகும். இம்மக்களுக்கு பாராபட்ச கவனிப்பு காட்டப்படுகிறது, பீடனைகளுக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர் என உலமகே ஏற்றுக் கொண்டுள்ளதால், அவர்கள் அனைவரையும் வெளியேற்ற எடுக்கும் முயற்சியை உடனடியாக நிறுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

🟩 நாட்டுக்கு உதவி உத்தாசை செய்து வருபவர்களை விரட்டாதீர்கள்.

இந்நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்க வளங்கள் போதுமானதாக இல்லை. அரசாங்கத்திற்கு மட்டுமல்ல, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து தீர்க்க வேண்டிய விடயமாகும். சிவில் சமூகம் மற்றும் சர்வதேச அமைப்புக்களைக் கூட ஒன்றிணைத்துக் கொண்டு, அனைவரினதும் உதவியுடன் நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். இறையாண்மை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டைப் பாதுகாத்துக் கொண்டு இவை முன்னெடுக்கப்பட வேண்டும். எமக்கு உதவி செய்யும் தரப்பினரை விரட்டி அடிக்கக் கூடாது. நாட்டுக்கு பெற முடியுமான அதிகபட்ச ஒத்துழைப்புகளையும் வளங்களையும் பெற்றுக் கொண்டு நாட்டை சுபீட்சத்திற்கு இட்டுச் செல்ல வேண்டும். இதற்கு ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய மக்கள் கூட்டணியும், எதிர்க்கட்சியும் ஆதரவைப் பெற்றுத் தரும். அரசாங்கத்தின் முற்போக்கான முன்னேற்றப் பணிகளுக்கு தமது ஆதரவைப் பெற்றுத் தருவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 பேச்சுச் சுதந்திரத்தைப் பாதுகாருங்கள்!

அண்மையில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தருக்கு உத்தரவொன்றை பிரப்பித்து, சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகளுக்கு எதிராக கூட்டங்களை நடத்துவதற்கும், அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மைக்கு எதிராக செயற்படுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நடவடிக்கைகளை செய்வதற்கு செல்ல வேண்டாம் என்று அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம். பல்கலைக் கழகங்களில் அமைதியான முறையில் நடக்கும் இவ்வாறான நிகழ்வுகளுக்கு தொந்தரவுகளைச் செய்யக்கூடாது. இது தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

வலையொளி இணைப்பு-

what happened promises made people 4971

இதையும் படியுங்கள்

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பஸ் மோதி விபத்து ஒருவர் பலி!

கொழும்பு விமான நிலையம் தொடர்பில் முக்கிய தீர்மானம்!

இந்தியாவிற்குள்ளும் நுழைந்தது HMPV வைரஸ்!

வாழைச்சேனையில் அதிரடி சுற்றி வளைப்பு : நால்வர் கைது!

யாழில் மீண்டும் சோதனைச் சாவடி – மக்கள் மத்தியில் அச்சம்!

நாயால் ஏற்பட்டு விபத்து – சிறுவன் உயிரிழப்பு!

தென்கொரியவில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு

தென்கொரியவில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு

‘Starlink’ பெக்கேஜ்களுக்கு TRCSL அனுமதி

'Starlink' பெக்கேஜ்களுக்கு TRCSL அனுமதி
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular