washing machine invented wash human body 3934
இன்றைய காலகட்டத்தில் குளிப்பதே பெரும்பாடாக உள்ளதாக தற்போதைய தலைமுறையினர் நொந்துகொள்கின்றனர். அனைத்து பிரச்சனைக்கும் தீர்வை வைத்திருக்கும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தற்போது ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுதான் மனிதர்களைக் குளிப்பாட்டும் நவீன ஹியூமன் வொஷிங் மெஷின்.
ஜப்பானின் ஒசாகாவைச் சேர்ந்த ஷவர்ஹெட் நிறுவனமான சயின்ஸ் கோ. நிறுவனம் இந்த நவீன வொஷிங் மெஷினை கண்டுபிடித்து ‘மிராய் நிங்கன் சென்டகுகி’ என்று பெயர்வைத்துள்ளது. இதற்கு “எதிர்காலத்தின் மனித வொஷிங் மெஷின்“ என்பது பொருளாகும்.
இந்த சலவை எந்திரம் ஒரு மனிதனைக் கழுவ 15 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது. நீங்கள் அதன் பிளாசிக் நாற்காலி மீது ஏறியதும் மெஷினில் பாதியளவு வெதுவெதுப்பான நீர் நிரம்பும். பின்னர் மெஷினில் இருந்து நீர் குமிழிகளாக வெடிக்கிறது.
இலங்கை வந்தடைந்தார் டொனால்ட் லூ!
இந்தியாவில் இருந்து அரிசி இறக்குமதி!
இடைக்கால கணக்கு அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!
இது உங்கள் தோலில் இருந்து அழுக்குகளை நீக்குகிறது. நீங்கள் அமர்ந்திருக்கும் நாற்காலியில் உள்ள மின் உணரிகள், உங்களின் உடலின் உயிரியல் தகவல்களைச் சேகரித்து நீங்கள் பொருத்தமான வெப்பநிலையில் கழுவப்படுவதை உறுதிசெய்யும்.
இதில் பிளாஸ்டிக் ‘மசாஜ் பந்துகள்’ அடங்கும். சரி, இது உடலை மட்டும்தான் சுத்தம் செய்கிறதா என்றால் இல்லை. இது உங்கள் மனதையும் அமைதிப்படுத்துகிறது.
மெஷினில் உள்ள செயற்கை நுண்ணறிவு ஏஐ [AI] சென்சார் உங்களின் சேகரிக்கப்பட்ட உடலின் உயிரியல் தகவல்களை ஆராய்ந்து உங்கள் மனதை அமைதிப்படுத்தும் காட்சி மற்றும் ஒலி அடங்கிய வீடியோவை நாற்காலி முன் ஒளிபரப்புகிறது. விளைவு, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் விரைவான குளியல்.
இந்த அதிநவீன மனித வாஷிங் மெஷின் ஒசாகா கன்சாய் எக்ஸ்போவில் விரைவில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. அங்கு 1,000 விருந்தினர்கள் இந்த குளியலை முயற்சிக்க உள்ளனர்.
washing machine invented wash human body 3934

இதையும் படியுங்கள்
அம்பாறை விபத்து – அதிபர், ஆசிரியர் விளக்கமறியலில்!
யாழ். ராணி புகையிரத சேவை மறு அறிவித்தல் வரை
வௌ்ளத்தால் 4 இலட்சம் பேர் பாதிப்பு!
ஆழ்ந்த தாளமுக்கத்தின் தற்போதைய நிலை!
கரையை கடக்கும் புயல்..! விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை..!
‘பார் குமார்’ பெயர் எவ்வாறு மாறியது?: மதுபான அனுமதிப் பத்திரங்கள் பற்றி அரசாங்கம்!
மீன்களின் விலை சடுதியாக அதிகரிப்பு!
இந்தியா – சிரியா உறவு எப்படிப்பட்டது? நேரு பயணத்தின் போது நடந்தது என்ன?

சிரியா: அசாத் மாஸ்கோவில் இருப்பதாக கூறும் ரஷ்ய அரசு ஊடகம்
