Friday, February 7, 2025
HomeLocal Newsகரையோர பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

கரையோர பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

warning issued for coastal areas 4013

புத்தளத்திலிருந்து காங்கேசன்துறை மற்றும் மன்னாரின் ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகளுக்கு கடற்றொழிலாளர்களை செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு, வடமேற்கு திசையில் வடக்கு இலங்கைக்கு அருகில் தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து செல்லும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அவ் வகையில் திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை பெய்யும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் காற்று வடகிழக்கிலிருந்து வடமேற்கு திசைக்கு மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

விஜய் அரசியல் வருகை கடினமாக உள்ளது!

அலப்பறை அர்ச்சுனாவும் கண்டு கொள்ளாத அரசும்!

அர்ச்சுனாவுக்கு எதிராக முறைப்பாடு!

மின்சார சபைக்கு 30 மில்லியன் டொலர் வழங்கிய ஆசிய அபிவிருத்தி வங்கி!

திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையிலும், புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் மணிக்கு 50 கிலோ மீற்றர் வரையிலும் வீசக்கூடும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் திசை மாறுபடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகவும் காணப்படும்.

புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புக்கள் மிதமானதாக காணப்படும்.இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தைக் குறைப்பதற்குப் பொதுமக்கள் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

warning issued for coastal areas 4013

இதையும் படியுங்கள்

கணவனை ஏமாற்றிய போலி மனைவி!

வாகன இறக்குமதிக்கு அனுமதி – அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள்!

மீன்களின் விலை சடுதியாக அதிகரிப்பு!

புவிவெப்ப ஆற்றல்: பூமியை ஆழமாக தோண்டி எடுக்கும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் சிறப்பு என்ன?

புவி வெப்ப ஆற்றல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல்

ஜெகதீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் – மாநிலங்களவை தலைவரை பதவி நீக்கம் செய்வதற்கான நடைமுறை என்ன?

ஜெகதீப் தன்கர்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular