Warning extream weather conditions strong winds 6400
நாட்டின் பல பாகங்களில் அசாதாரண காலநிலையுடன் பலத்த காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (20) காலை 10.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (21) காலை 10.00 மணி வரை செல்லுபடியாகும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் தென்மேற்கு பருவப் பெயர்ச்சியால், சபரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வட மத்திய மாகாணங்களில் மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் ஒரளவு பலத்த காற்று வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, மேல் கொத்மலையின் நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவு இன்று (20) அதிகாலை திறக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு வௌியிட்டுள்ளது.
மேல் கொத்மலையின் நீரேந்து பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்தால், நீர்த்தேக்கத்தின் மீதமுள்ள வான்கதவுகள் தானாகவே திறக்கும் என்பதால், நீர்த்தேக்க அணையின் கீழ் பகுதியில் உள்ள கொத்மலை ஓயாவின் இருபுறமும் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்குமாறும் அந்த பிரிவு அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன் அந்தப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையால் செயிண்ட் கிளேயார் மற்றும் டெவோன் நீர்வீழ்ச்சிகளின் நீரின் அளவும் அதிகரித்துள்ளது.
Warning extream weather conditions strong winds 6400


மேலும் வாசிக்க :
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி காலமானார்!
வியானா கால்வாயில் வீழ்ந்த வாகனம் – இருவர் உயிரிழப்பு!
புதிய வரலாற்று சாதனை – கொழும்பு பங்குச் சந்தை!
பெண் பொலிஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்.ஐ நீதிமன்றுக்கு!
நச்சு வாசனை திரவியத்தை நுகர்ந்த மாணவர்கள் வைத்தியசாலையில்!
தெஹிவளை துப்பாக்கிச் சூடு : கைவிடப்பட்ட மோட்டார் சைக்கிள்
பாடசாலை மாணவிகள் கர்ப்பமடைவது அதிகரிப்பு
