Two killed as vehicle falls into Vienna canal 6296
மஹியங்கனை – பதுளை பிரதான வீதியில் மஹியங்கனையின் 17 ஆவது தூண் அருகே உள்ள வியானா கால்வாயில் கார் ஒன்று இன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாபாகடவெவ பொலிஸ் பயிற்சிப் பாடசாலை அதிகாரிகள், மஹியங்கனை பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து கவிழ்ந்த காரை மீட்டுள்ளனர்.
காரில் இருந்து மீட்கப்பட்டவர்கள் உடனடியாக நோயாளர் காவு வாகனம் மூலம் மஹியங்கனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது இருவரும் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.
விபத்துக்குள்ளான காரில் பயணித்த இருவரும் மொனராகலை, ஒக்கம்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர்கள் என
தெரியவந்துள்ளது.
மேலும் வாசிக்க :
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி காலமானார்!
காட்டி ஆட்டத்தை வென்றெடுத்த ஸ்டோக்ஸ்; கில் கோட்டை விட்டது எங்கே?
