Tuesday, October 14, 2025
HomeIndian News25 நிபந்தனைகளுடன்பொலிஸார் அனுமதி - திருச்சியில் முதல் பிரசாரம்: தவெக தலைவர் விஜய்!

25 நிபந்தனைகளுடன்பொலிஸார் அனுமதி – திருச்சியில் முதல் பிரசாரம்: தவெக தலைவர் விஜய்!

tvk vijey tamil nadu thiruchi campaing 6986

தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய்யின் தமிழகம் முழுவதுமான மக்கள் சந்திப்புப் பயணம் திருச்சியிலிருந்து இன்று ஆரம்பிக்கவுள்ளது. சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு சென்ற விஜய், அவருக்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு வாகனத்தில் மரக்கடைப் பகுதிக்கு சென்றார்.

திருச்சிக்கு செல்லும் விஜயை வரவேற்க விமான நிலையத்தில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விஜய் வருகையை முன்னிட்டு, ஏராளமான ரசிகர்களும் ஆதரவாளர்களும் திருச்சி விமான நிலையத்தில் குவிந்திருந்தனர்.

விமான நிலையத்திலிருந்து விஜய் இருக்கும் வாகனம் வெளியே வர முடியாத அளவுக்கு ரசிகர்கள் பாதையை சூழ்ந்துகொண்டுள்ளனர்.

பிரசாரத்துக்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு இன்று காலை 9.40 மணிக்கு வந்தார் விஜய்.

விமான நிலையத்திலிருந்து சாலை வழியாக டி.வி.எஸ். சுங்கச்சாவடி தொடங்கி பாலக்கரை வழியாக மரக்கடை பகுதிக்கு சென்று அங்கு உரையாற்றவுள்ளாா்.

எனினும் ஆதரவாளர்கள் கூட்டம் அதிகரித்தமை காரணமாக குறிப்பிட்ட நேரத்தில் பரப்புரையை ஆரம்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

திருச்சியில் போக்குவரத்து பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகிறது. விஜயை காண திருச்சி டோல்கேட் பகுதியில் ஏராளமான தொண்டர்கள் குவிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி 2 மாநில மாநாடுகளை நடத்தியிருக்கும் விஜய், முதல்முறையாக மக்களை சந்திக்கும் தோ்தல் பிரசார பயணத்தை திருச்சியில் தொடங்கவிருப்பதை முன்னிட்டு திருச்சி மாநகரம் முழுவதும் விஜய் தொண்டர்களால் சூழப்பட்டுள்ளது.

விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த அவர், பிரத்யேக பிரசார வாகனத்தில் ஏறி புறப்பட்டார். இந்த வாகனம் சென்னையிலிருந்து கொண்டு வரப்பட்டு திருச்சியில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. திருச்சி விமான நிலையத்தில் விஜயை பார்த்ததும் அவரது தொண்டர்கள் தடுப்புகளைத் தாண்டி உள்ளே வர முற்பட்டதால் பாதுகாப்புப் படை வீரர்கள் அவர்களை தடுத்து வருகிறார்கள்.

மரக்கடை பகுதியில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு புறவழிச் சாலை வழியாக அரியலூா் புறப்பட்டு செல்கிறாா் விஜய். அங்கு பிரசாரத்தை முடித்துவிட்டு பெரம்பலூரிலும் பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார். அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக விஜய்யின் பிரசார பயணத்துக்கு 25 நிபந்தனைகளுடன் பொலிஸார் அனுமதி அளித்திருந்தனர். அதன்படி அரியலூர் உட்கோட்ட எல்லைக்குள் காவல்துறை விதிகளுக்கு உட்பட்டே நடந்து கொள்ள வேண்டும்.

பரப்புரைக்கு வரும் கட்சியினர் அனைவரும் காலை 11.25 மணிக்குள் பரப்புரை நடக்கும் இடமான அரியலூர் பழைய பஸ் நிலைய பகுதிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும்.

தங்களது தலைவர் திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக புறப்பட்டு திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை வழியாக கீழப்பழுவூர் புறவழிச்சாலையில் இருந்து கீழப்பழுவூர் திடீர் குப்பம், வாரணவாசி, தவுத்தாய்குளம், அரியலூர் கலெக்டர் அலுவலக ரவுண்டானா வழியாக அரியலூர் பழைய பஸ் நிலையத்திற்கு வரும்போது சாலை வலம் (ரோடு ஷோ) நடத்தக் கூடாது.

மேலும் எந்தப்பகுதியிலும் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தக்கூடாது. பரப்புரை வழித்தடத்தினில் தங்கள் தலைவரின் வாகனத்திற்கு பின்னால் 5 வாகனங்களுக்கு மேல் எந்தவொரு வாகனமும் அனுமதிக்கப்படாது.

பொதுமக்கள் பரப்புரையை சிரமமின்றி பார்க்கும் வகையில் தடுப்பு அரண்களை தாங்களே அமைத்து தர வேண்டும்.

இதுபோன்ற நிபந்தனைகளில் எவையேனும் மீறப்படும் பட்சத்தில் பரப்புரையை இடையிலேயே நிறுந்துவதற்கு பொலிஸாருக்கு முழு அதிகாரம் உள்ளது என்பது உள்பட 25 நிபந்தனைகளை விதித்து பொலிஸார் அனுமதி அளித்திருந்தனர்.

tvk vijey tamil nadu thiruchi campaing 6986

மேலும் செய்திகள் >>>

நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட எச்சரிக்கை!

இந்திய மாணவர்களுக்கு 80% வீசா நிராகரிப்பு!

புலம்பெயர் தமிழர்களிடம் பண மோசடி – அருண் தம்பிமுத்துவின் வழக்கு ஒத்திவைப்பு!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular