trump be sworn with ease 5401
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில்,வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20ஆம் திகதி ஜனாதிபதியாகப் பதவியேற்க உள்ளார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் கடும் குளிர் காரணமாக, பதவியேற்பு விழா, வரும் ஜனவரி 20ஆம் திகதி அமெரிக்க நேரப்படி 3 மணிக்கு உள் அரங்கத்தில் நடக்கும் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பதவியேற்பு விழா குறித்து டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் :
“ஆரம்பத்தில் என்னையும், எனது நிர்வாகத்தையும் எதிர்த்தவர்கள் கூட, தற்போது பதவியேற்பு விழா எப்போது நடக்கும் என்று விரும்புகிறார்கள். நம் நாட்டு மக்களைப் பாதுகாப்பது எனது கடமையாகும்.
வானிலை நிலைமையைக் கருத்திற்க்கொண்டு பதவியேற்பு விழா வரும் ஜனவரி 20ஆம் திகதி மதியம் 3 மணிக்கு (அமெரிக்க நேரப்படி) உள் அரங்கத்தில் நடக்கிறது. எந்த வகையிலும் மக்கள் காயப்படுவதை நான் பார்க்க விரும்பவில்லை. பல்லாயிரக்கணக்கான சட்ட அமுலாக்கப் பிரிவினர், பொலிஸார் மற்றும் குதிரைகள் மற்றும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் ஜனவரி 20ஆம் திகதி பல மணி நேரம் வெளியில் இருப்பது ஆபத்தான நிலைமையாகும்.
இலங்கை புகையிரதங்களில் புதிதாக ஆரம்பிக்கப் பட்டிருக்கும் SPA மசாஜ் சேவை!
மின்சார கட்டணம் 20 சதவீதத்தால் குறைப்பு!
இந்தியாவிடம் மெட்டா நிறுவனம் மன்னிப்பு கோரியது!
எந்தவொரு நிகழ்விற்கும் நீங்கள் வர முடிவு செய்தால், பாதுகாப்பு ஆடைகளை அணியுங்கள்.மிகவும் குளிரான காலநிலை காரணமாகப் பதவியேற்பு உரையை உள் அரங்கத்தில் நடத்த உத்தரவிட்டுள்ளேன். பல்வேறு உயரதிகாரிகள் மற்றும் விருந்தினர்கள் அரங்கத்திற்கு அழைத்து வரப்படுவார்கள். இது அனைவருக்கும் மிகவும் அழகான அனுபவமாக இருக்கும்.
இந்த வரலாற்று நிகழ்வைத் தொலைக்காட்சியில் நேரலையாகக் காண அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நாங்கள் ஒன்றாக சேர்ந்து, மீண்டும் அமெரிக்காவை சிறந்ததாக மாற்றுவோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
trump be sworn with ease 5401


இதையும் படியுங்கள்
கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் விலை குறையும்!
மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!
பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை
வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?
நானுஓயாவில் மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து

மவுஸ்ஸாக்கலை தொடர் குடியிருப்பில் தீ விபத்து
