Traditional bus service returns normal Colombo 6644
கொழும்பில் பாரிம்பரியமாக இயங்கிய நிலையில் நிறுத்தப்பட்டிருந்த 155 இலக்க பேருந்து சேவை இன்று (11) முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வட கொழும்பின் பிரதான மார்க்கங்களில் செல்லும் 155ஆம் இலக்க பேருந்து சேவை, சில ஆண்டுகளுக்கு முன்னர் நிறுத்தப்பட்டது.
குறித்த பகுதியில் வாழும் பொதுமக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய மாநகர சபை அமர்வுகள் மற்றும் பிற அபிவிருத்தி கூட்டங்களில் தொடர்ச்சியாக இந்த பேருந்து சேவையின் தேவைகள் தொடர்பில் எடுத்துக்கூறப்பட்டன.
இதன் பயனாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் கீழ் இன்று (11) காலை 5.30 மணி முதல் 155 பேருந்து சேவை மட்டக்குளி தொடக்கம் நகர மண்டபம் வரை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டது.
Traditional bus service returns normal Colombo 6644
மேலும் வாசிக்க :
பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுப்பு!
65,000 ரூபாய் சம்பளம் வாங்கும் அரச அதிகாரியிடம் 110 பேருந்துகள்!
சி.ஐ.டியில் ஆஜரான அர்ச்சுனா எம்.பி!
காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரணைகள் – சர்வதேசமயமாக்கப்பட வேண்டும்!
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பெருந்தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஓராண்டு நினைவேந்தல்!
குருக்கள் மடம் மனிதப் புதைகுழி வழக்கு: களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!
சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு!
