Tension courts prison vehicle remanded Ranil 6823
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அருகே பதற்றமான சூழல் ஏற்பட்டது.
நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களும், ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவாளர்களும் கூடியிருந்தபோதே இந்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, கோட்டை நீதிமன்றத்திற்கு சிறைச்சாலை பேருந்தொன்று கொண்டு வரப்பட்டதால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவாளர்கள் மத்தியில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
பேருந்தை கண்டவுடன், ரணிலின் ஆதரவாளர்கள் கத்தி கூச்சலிட்டுள்ளனர்.
எனினும், குறித்த பேருந்து, சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை ஏற்றிச் செல்வதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் நீதிமன்ற அறையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, வழமைக்கு திரும்பியிருந்தது.
மின்சாரம் தடைபட்டதால், வழக்கில் உத்தரவு வழங்குவது தாமதமானதும் குறிப்பிடத்தக்கது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, வழக்கின் தீர்ப்பை அரை மணி நேரம் ஒத்திவைக்க நீதவான் உத்தரவிட்டார்.
மாலை 5.30 மணியளவில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணைகள் தாமதமாகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
UPDATED
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
Tension courts prison vehicle remanded Ranil 6823
மேலும் வாசிக்க :
விசேட செய்தி : ரணில் கைது செய்யப்பட்டுள்ளார்
காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் போராட்டத்திற்கு யாழ் மாணவர்கள் ஆதரவு!
முச்சக்கர வண்டி சாரதிக்கு மரண தண்டனை!
இரட்டை உலக சாதனைக்கு தயாராகும் சாமுத்ரிகா பெண்கள்!
உலக சாதனை படைக்கவுள்ள இலங்கை எண்சட்ட மனக் கணித போட்டிகள்!
எட்ரா கொக்கிய: கூலி படத்தின் திரைவிமர்சனம் – ரேட்டிங்: 8/10
வெளிநாடு செல்வோர் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!
சட்டவிரோத குடியேறிகளுக்கு பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை!
இரட்டை உலக சாதனைக்கு தயாராகும் சாமுத்ரிகா பெண்கள்!
திருமணத்திற்கு முன் இருபாலாருக்கும் கட்டாய முழு இரத்தப் பரிசோதனை!
கீரி சம்பா அரிசி பற்றாக்குறையா??? மாற்று அரிசி இறக்குமதி செய்யப்படுமா?
கஞ்சா பயிரிடுவதால் நாட்டிற்க்கு எந்த தீங்கும் ஏற்படாது
