taiwan government Order kill 1 2 lakh chameleons 5608
உள்நாட்டு விவசாயத்தை அதிகளவில் சார்ந்துள்ள நாடு தைவான் ஆகும்.
அங்கு பெரியவகை பச்சோந்திகளின் (பச்சை உடும்புகள்) எண்ணிக்கை அதிகரிப்பால் அந்நாட்டின் விவசாயம் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது.
இதனால் 1.2 லட்சம் பச்சோந்திகளை கொல்லும் முடிவை தைவான் அரசு அறிவித்துள்ளது.
தைவானின் வனவியல் மற்றும் இயற்கை பாதுகாப்பு அமைப்பின் கூற்றுப்படி, தீவின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் சுமார் 2,00,000 பெரியவகை பச்சோந்திகள் இருக்கின்றன.
கடந்த ஆண்டு சுமார் 70,000 பெரியவகை பச்சோந்திகளை சிறப்பு வேட்டை குழுவினர் கொன்றனர்.
ஒரு பச்சோந்தியை கொல்வதற்கு தலா 15 டொலர்கள் அவர்களுக்கு சன்மானமாக வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டு 1.2 இலட்சம் பச்சோந்திகளைக் கொல்ல தைவான் அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இவ்வகை பச்சோந்திகள் வாழும் கூடுகளை இனங்காண உள்ளூர் மக்கள் உதவ வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளை தாயகமாகக் கொண்ட இவ்வகை பச்சோந்திகள் தைவானில் வேறெந்த அதிக அளவில் பெருகி, உள்ளூர் பயிர்களுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.
தைவானில் இயற்கையாகவே வேட்டையாடும் எந்த உயிரினமும் அதிகம் இல்லாதது இந்த பச்சோந்திகளின் பெருக்கத்துக்கு வழிவகுத்துள்ளது.
முதலில் இவை தைவானுக்கு செல்லப்பிராணிகளாக கொண்டுவரப்பட்டன.
இவற்றை ஒரு வருடத்திற்கு மேல் கூண்டில் வைத்து பராமரிக்க முடியாது. எனவே அவை வளர்ந்த பின் மக்கள் அவற்றை காட்டில் விட்டனர்.
தொடர்ந்து இவை உள்ளூர் விவசாய வயல்களையும் சுற்றுச்சூழலையும் சேதப்படுத்தத் தொடங்கின.
இவை கூர்மையான நகங்கள் மற்றும் பற்களை கொண்டிருந்தாலும் முரட்டுத்தனம் இருக்காது.
பெரும்பாலும் பழங்கள், இலைகள் மற்றும் செடிகளை மட்டுமே உணவாக உட்கொள்ளும். பிங்டங் கவுண்டி போன்ற தைவானின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் இவை அதிகம் உள்ளன.
பெரியவகை பெண் பச்சோந்திகள் ஒரே நேரத்தில் 80 முட்டைகள் வரை இடும்.
அவை 20 ஆண்டுகள் வரை வாழும். சுமார் 5 கிலோகிராம் வரை எடை கொண்டிருக்கும்.
தற்போது 1.2 இலட்சம் பச்சோந்திகளைக் கொல்ல அரசு முடிவெடுத்துள்ள நிலையில் மீன்பிடி ஈட்டிகளைப் பயன்படுத்துவது அவற்றை கொல்ல மிகவும் ‘மனிதாபிமான வழி’ என்று கூறியுள்ளது.
taiwan government Order kill 1 2 lakh chameleons 5608


இதையும் படியுங்கள்
கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் விலை குறையும்!
மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!
பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!