Friday, February 7, 2025
HomeIndian Newsசைஃப் அலிகானை குத்திய சந்தேகநபர் கைது!

சைஃப் அலிகானை குத்திய சந்தேகநபர் கைது!

suspect arrested stabbing saif alihan 5370

பொலிவுட் நடிகர் சைஃப் அலிகான் மீதான கத்திக் குத்து வழக்கில் சந்தேகிக்கப்படும் நபரை மும்பை பொலிஸார் இன்று (வெள்ளிக்கிழமை) கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மும்பை பொலிஸார் பல்வேறு சந்தேக நபர்களை பாந்த்ரா பொலிஸ் நிலையத்துக்கு நேற்றிரவு இரவு அழைத்து வந்துள்ளனர். அவர்களில் ஒருவரை பொலிவுட் நடிகர் சைஃப் அலிகான் மீதான கத்திக் குத்து வழக்கு தொடர்பாக மேலதிக விசாரணைக்காக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

பொலிவுட் நடிகர் சைஃப் அலிகான் (54) மும்பை மேற்கு பாந்த்ரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். 11-வது தளத்தில் உள்ள அவரது வீட்டுக்குள் கடந்த புதன்கிழமை இரவு மர்ம நபர் ஒருவர் புகுந்தார். கொள்ளையடிக்கும் நோக்கில் அவர் வீட்டுக்குள் நுழைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

நிலவில் ஆய்வு நடத்த 2 லேண்டர்கள் அனுப்பியது ஸ்பேஸ்எக்ஸ்!

உப்பும் உறவும் கைப்பிடியளவு என்று ஏன் சொல்கிறார்கள்?

கோட்டாபய – மனுஷ சிஐடியில் முன்னிலை!

சத்தம் கேட்டு நடிகர் சைஃப் அலிகான் எழுந்துள்ளார். வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபரை அவர் பிடிக்க முயன்ற போது மர்மநபர் கத்தியால் 6 முறை நடிகர் சைஃப் அலிகானை குத்தியுள்ளார். இதில் சைஃப் அலிகானுக்கு பல இடங்களில் கத்திக் குத்து விழுந்த நிலையில் அவர் படுகாயமடைந்தார்.

இதனை தொடர்ந்து சைஃப் அலிகானை அவரது மூத்த மகன் இப்ராகிம் மற்றும் வீட்டில் வேலை செய்யும் நபர் ஆகியோர் மும்பை பாந்த்ரா பகுதியில் லீலாவதி வைத்தியசாலைக்கு அதிகாலை 3 மணிக்கு கொண்டு சென்றனர். அறுவை சிகிச்சைக்குப் பின் அவர் அபாய கட்டத்தை தாண்டியதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

suspect arrested stabbing saif alihan 5370

இதையும் படியுங்கள்

கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் விலை குறையும்!

மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!

பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை

வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?

16 வயது மாணவர்கள் இருவர் விபத்தில் பலி

16 வயது மாணவர்கள் இருவர் விபத்தில் பலி

ஐ.தே. கட்சி தொடர்பில் ஐ.ம.சக்தியின் செயற்குழுவில் தீர்மானம்

ஐ.தே. கட்சி தொடர்பில் ஐ.ம.சக்தியின் செயற்குழுவில் தீர்மானம்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular