Saturday, February 8, 2025
HomeLocal Newsஇளைஞர்களை தாக்கிய பொலிஸார் பணியிடை நீக்கம்!

இளைஞர்களை தாக்கிய பொலிஸார் பணியிடை நீக்கம்!

srilanka youths attacked by police 2670

கொழும்பின் புறநகர் வத்தளை, பமுனுகம பிரதேசத்தில் இரண்டு இளைஞர்களை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பமுனுகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு, பமுனுகம பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்கள் கொடூரமான முறையில் தாக்கப்பட்டதாகக் கூறி பிரதேசவாசிகள் குழுவொன்று நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

srilanka youths attacked by police 2670

இந்த இரண்டு இளைஞர்களும் பமுனுகம, போபிட்டிய பிரதேசத்தில் வீடொன்றை உடைத்து தங்க நகையை திருடிச் சென்றதாக கூறப்படும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்

எவ்வாறாயினும், குறித்த இளைஞர்கள் திருட்டில் ஈடுபடவில்லை என உறுதியளிக்கும் அதே வேளையில், இந்த இரண்டு இளைஞர்களையும் பொலிஸ் அதிகாரிகள் கொடூரமான முறையில் தாக்கியதாக பெற்றோர்களும் கிராம மக்களும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்தநிலையில் துங்கல்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலையீட்டில், தாக்கப்பட்டவர்கள் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

srilanka youths attacked by police

இவைகளையும் படியுங்கள்:

மூன்று மாடி கட்டிடமொன்றில் தீ!

ரஞ்சன் ராமநாயக்க எதிராக உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல்!

அரச சேவையை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் – பிரதமர் ஹரிணி!

ரயில் ஊழியர்களுக்கு இலவச ரயில் அனுமதிச் சீட்டு வழங்க பணிப்புரை!

கனடாவிலுள்ள சர்வதேச மாணவர்கள் தொடர்பில் வெளியான அறிவித்தல்!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular