srilanka president announced electricity bill reduce 2724
அடுத்த சில வருடங்களில் மின் கட்டணத்தை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்க எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
வணிகச் சபை பிரதிநிதிகளுடன் நேற்று (29) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
மின்சக்தி மற்றும் வலுசக்தி துறைகள் தொடர்பான தீர்மானங்களை எடுப்பதில் வலுசக்தி சுயாதிகாரத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும், புதிய மின்சார சட்டத்தை தயாரிக்கும் போது, வலுசக்தி சுயாதிகாரத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஏற்றுமதி துறையை பலப்படுத்தல் மற்றும் சர்வதேச புதிய சந்தை வாய்ப்புக்களை தேடிக்கொள்வது தூதரக சேவையின் முக்கிய பணி என்ற வகையில் அதற்கான இயலுமைகளை கொண்டிருக்கும் திறமையானவர்களை தூதரக சேவைகளுக்கு நியமிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்
srilanka president announced electricity bill reduce 2724
இவைகளையும் படியுங்கள்:
அரசியல் கலாசாரத்தை மாற்ற வேண்டும் – ஜனாதிபதி!
இஸ்ரேலின் தாக்குதல்களை குறைவாக மதிப்பிட முடியாது!
பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்!
கடவுள் மறுப்பு, குடும்ப அரசியல், பிளவுவாத அரசியல்’ -தொண்டர்களைப் பார்த்து கண்கலங்கிய விஜய்

கனடாவில் ‘காலிஸ்தான்’ ஆதரவு எந்த அளவு இருக்கிறது? அரசியலில் அவர்களின் பங்கு என்ன? பிபிசி கள ஆய்வு
8 நிமிடங்களுக்கு முன்னர்

காணொளி,லெபனானில் இஸ்ரேல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுவன், கால அளவு 2,27
