Sunday, February 16, 2025
HomeSports Newsஅவுஸ்திரேலிய பிஃபா அணியில் கோலோச்சும் தமிழ் வீரர்!

அவுஸ்திரேலிய பிஃபா அணியில் கோலோச்சும் தமிழ் வீரர்!

2026க்கான பிஃபா உலகக்கிண்ண தகுதிகான் சுற்றில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட நிஷான் வேலுப்பிள்ளை அவுஸ்திரேலிய தேசிய கால்பந்து அணியில் இடம்பிடித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை சீனாவுக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் 23 வயதான நிஷான் வேலுப்பிள்ளை தனது முதல் கோலை அணிக்காக பெற்றுக்கொடுத்துள்ளார்.

நிஷான் வேலுப்பிள்ளை 2019 ஆம் ஆண்டு முதல் அவுஸ்திரேலியாவில் எடிலெய்ட் யுனைடெட் அணிக்காக விளையாடி வருகிறார்.

பிஃபா உலகக்கிண்ண தகுதிச் சுற்று போட்டிகளில் அவுஸ்திரேலிய அணி தொடர்ந்து பின்னடைவை எதிர்கொண்டு வந்த நிலையில், அணியின் மேலாளராக புதிதாக பொறுப்பேற்ற டோனி போபாவிக் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற சீனாவுக்கு எதிரான போட்டியில் நிஷான் வேலுப்பிள்ளையை அணிக்குள் இணைத்துக்கொண்டார்.

அவுஸ்திரேலிய அணிக்காக மாற்று வீரராக போட்டியின் 83ஆவது நிமிடத்தில் களம் நுழைந்த நிஷான் அடுத்த 7 நிமிடத்தில் தனது அறிமுக போட்டியில் முதல் சர்வதேச கோலை அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களித்தார்.

இந்நிலையில், அவர் அவுஸ்திரேலிய அணிக்காக கோல் அடித்த காணொளியும் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, நிஷான் வேலுப்பிள்ளையின் கோல் மூலம் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய கால்பந்து அணி, ஃபிஃபா உலகக்கிண்ண தகுதி வாய்ப்பை தக்கவைத்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular