Sunday, February 16, 2025
HomeTop Storyபாடசாலைகளுக்கு மிக நீண்ட விடுமுறை - பெற்றோர்களுக்கு எச்சரிக்கை!

பாடசாலைகளுக்கு மிக நீண்ட விடுமுறை – பெற்றோர்களுக்கு எச்சரிக்கை!

sri lanka long school holiday warning to parents 3563

இலங்கையில் பாடசாலைகளுக்கு மிக நீண்ட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால், விடுமுறை காலத்தில் தமது பிள்ளைகள் தொடர்பில் மிகுந்த அவதானமாக இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்திற்கும் இன்று(22) முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து பாடசாலைகளினதும் மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு பெறுவதுடன், மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகும்.

இதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதியே பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக மீள திறக்கப்படும்.

உயர்தர பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவித்தல்!

பாடசாலை விடுமுறை – கல்வி அமைச்சு அறிவித்தல்!

தமிழீழத்திலிருந்து சென்று சிறி லங்கா நாடாளுமன்றில் LIVE போட்ட ‘தமிழன்டா’ அர்ச்சுனா!!!

களவாணி படத்தில் KGF யாஷ் நடித்துள்ளாரா!

இலங்கை மீது பொருளாதார தடையை கோரும் சீமான்!

இவ்வாறான சந்தர்ப்பத்தில், பல பிள்ளைகள் விடுமுறை நாட்களில் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள்.

மேலும் டிஜிட்டல் திரைகளின் பயன்பாட்டிற்கு அடிமையாகியுள்ளனர்.

இதனால், ‘உளவியல் சமூக சூழலை’ இழந்து பிள்ளைகள் மன உளைச்சலுக்கு ஆளாகும் அபாயம் உள்ளதாக, சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

கவலை, மனச்சோர்வு மற்றும் தூக்கமின்மை போன்ற பாதிப்புகளுக்காக சிகிச்சை பெறும் மின்னணு திரைகளுக்கு அடிமையான குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

மேலும், பல பிள்ளைகள் தவறான இணையளத் தளப் பாவனையில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.

இரண்டு மாதங்களுக்கு சூரியனை காணாத நகரம்! 

விவாகரத்து பற்றி ஏ.ஆர் ரஹ்மானின் எக்ஸ் தள பதிவு!

எனவே, பிள்ளைகள் மீதான தங்கள் பொறுப்பு குறித்து பெற்றோர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத் திணைக்களம் கடுமையாக எச்சரித்துள்ளது.

அத்துடன், விடுமுறைக் காலங்களில் சுற்றுலா செல்லுதல், நண்பர்களுடன் வௌியில் செல்லுதல் மற்றும் அபாயகரமாக விளையாட்டுக்களில் ஈடுபடுதல் போன்ற விடயங்களும் மாணவர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

sri lanka long school holiday warning to parents 3563

இதையும் படியுங்கள்

முச்சக்கரவண்டி விபத்து 4 பாடசாலை மாணவர்கள் படுகாயம்

பாராளுமன்ற தேர்தலில் மாவட்ட அடிப்படையில் விருப்புவாக்குப் பெற்றவர்கள் விபரம்!

புதிய நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள பெண் பிரதிநிதிகள்!

அமெரிக்க ஏவுகணையைக் கொண்டு ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல்!

கடலோர ரயில் சேவையில் தாமதம்

கடலோர ரயில் சேவையில் தாமதம்

மின்சாரம் தாக்கியதில் ஒருவர் பலி

மின்சாரம் தாக்கியதில் ஒருவர் பலி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular