Tuesday, October 14, 2025
HomeLocal Newsநேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட எச்சரிக்கை!

நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட எச்சரிக்கை!

special warning to sri lankans in nepal 6971

நேபாளத்தில் நிலவும் தற்போதைய அமைதியற்ற சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு நேபாளத்தில் வசிக்கும் இலங்கையர்கள் வீட்டிலேயே இருக்குமாறு இலங்கை வெளியுறவு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

இலங்கை தூதரக அதிகாரிகளை +977- 9851048653 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் மற்றும் உலர் உணவுப் பொருட்களை எப்போதும் தங்களிடம் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மருந்துகளைப் பயன்படுத்துபவர்கள் அவற்றை எப்போதும் தங்களிடம் வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் 99 இலங்கையர்கள் உள்ளனர், அதில் தூதரக ஊழியர்கள் உட்பட 22 மாணவர்கள் உள்ளனர்.

இதேவேளை இப் போராட்டத்தினால் இலங்கையர்கள் யாரும் காயமடைந்ததாக இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

special warning to sri lankans in nepal 6971

மேலும் செய்திகள் >>

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைமைக் காரியாலய திறப்பு விழா!

காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்க அமைச்சரவை அங்கீகாரம்!

அமெரிக்காவுக்கு எதிராக சதி செய்யும் உங்கள் மூவருக்கும் வாழ்த்துக்கள் – ட்ரம்ப்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular