special train service festive season 4984
இவ்வருடத்தின் (2025) ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் விசேட ரயில்களை இயக்குவதற்கு இலங்கை ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
தைப்பொங்கல் பண்டிகை, சுதந்திர விழா மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களில் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரையிலும், கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரையிலும் இந்த விசேட ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
பின்வருமாறு விசேட ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
1) விசேட ரயில் எண். 01 – கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை
கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பாடு – இரவு 07:30 க்கு
இயங்கும் திகதிகள் – ஜனவரி 10, 12, 14, 17, 19, 24, 26, 31 மற்றும் பிப்ரவரி 02, 04.
2) விசேட ரயில் இலக்கம் 02 – பதுளையிலிருந்து கொழும்பு வரை
பதுளையில் இருந்து புறப்பாடு – மாலை 05:40
இயங்கும் திகதிகள் – ஜனவரி 10, 12, 14, 17, 19, 24, 26, 31 மற்றும் பிப்ரவரி 02, 04.
3) விசேட நகரங்களுக்கு இடையேயான ரயில் சேவை (4021 4022) – கொழும்பு கோட்டை மற்றும் காங்கேசந்துறைக்கு இடையில்
கொழும்பு கோட்டையில் இருந்து புறப்பாடு – 05:30 AM
காங்கசந்துறையில் இருந்து புறப்பாடு – பிற்பகல் 01:50
இயங்கும் திகதிகள் – ஜனவரி 10, 13, 14, 15, 17, 20, 24, 27, 31 மற்றும் பிப்ரவரி 03, 04.
special train service festive season 4984


இதையும் படியுங்கள்
பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!
லடாக் பகுதியில் சீனாவின் புதிய மாவட்டங்கள்!
வெலிகமயில் பயங்கரம் 5 பேரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு!
மதத்தின் பெயரால் பாலியல் லீலை – இலங்கை வைத்தியர் சிக்கினார்!
புதிய வடிவில் TELL IGP மற்றும் l-need சேவைகள்

வடமத்திய மாகாணத்தில் 11 ஆம் தர பரீட்சைகள் ரத்து
